பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வார்ப்புரு:80

 மிழலைத்திருப்பதிகத்திலும்1, மறைக்காட்டில் கதவடைக்கப் பாடியகுறிப்பைத் திருமறைக்காட்டுத் திருப்பதிகத்திலும்2,' சமணர் தம் திருமடத்துக்கிட்ட தீயை பாண்டியனைப் பற்றச் செய்த குறிப்பைத் திருவாலவாய்த் திருப்பதிகத்திலும்3, திருநீற்றால் பாண்டியன்சுரந்தீர்த்தகுறிப்புதிரு. நீற்றுப்பதிகத்திலும்4,கோளறுபதிகத்திலும்5,°சமணரொடு வாது செய்த குறிப்பைத் திருவாலவாய்த் திருப்பதிகங்களி லும்6, ஆற்றில் ஏடு செலுத்திய குறிப்பு, திருப்பாசுரப் பதிகத்திலும்7, திருக்கழுமலப் பதிகத்திலும்8, ஒடம்விட்ட செய்தியைத் திருக்கொள்ளம்பூதூர்த் திருப்பதிகத்திலும்8,ஆண்பனை பெண்பனையான நிகழ்ச்சியைத் திருவோத்தூர்த் திருப்பதிகத்திலும்9,முத்திவேண்டியதைத் திருநல்லூர்ப் பெருமணத் திருப்பதிகத்திலும்10, காட்டியுள்ளனர்.

பிற சமயக் குறிப்புக்கள்

திருஞானசம்பந்தர் காலத்தில் வேத வழக்கொடுபட்ட வைதிக நெறியை மேற்கொள்ளாத புத்தர், சாக்கியர், தேரர், சமணர் முதலிய சமயத்தவர்கள் தமிழகத்தில், இருந்து வந்தனர். ஞானசம்பந்தர் அவர்களுடைய நடை உடை ஒழுக்கம் முதலியவற்றில் அருவருப்புற்றுத் தாம் பாடிய திருப்பதிகங்களில் அவற்றை மறுத்தும்,வெறுத்தும், வெகுண்டும், கடிந்தும், எள்ளியும், இகழ்ந்தும் பாடி யுள்ளார்12. இதைக் கண்ட ஆராய்ச்சியாளர், "ஞானசம்

1. ஞானசம். 92; 1,2 2, ஞானசம். 173 : 1. 3. ஷ 309: 1, 6, 11. 4. ஷ 272 : 11. 5. ஷ 221:10 6. ஷ 94; 10, 353 : 10. 7. ஷ 312: 11. 8. ஷ 371 : 12. 9. ஷ 264; 6. 10 ஷ 54 : 11 11.ஷ383 : 10. 12. சில திருப்பதிகங்களில் இக்குறிப்புக்கள் காணப்பட வில்லை. அவை, ஞானசம். 57, 73, 78, 138, 156, 179, 180, 203, 214, 215, 247-8; 253, 316, 321, 330, 352, 370, 371-ஆகப்பத்தொன்பதுமாம். இவற்றுட் சில சமண்புத்தர்களைக் காண்பதற்கு முன் பாடியனவாகவும் இருக்கலாம் ; சிலவற்றில் சிதைந்து போயு மிருக்கலாம் என்பர்.