பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

85

திருஞானசம்பந்தர்

 தம்மைக் குண்டரெனக் கூறிக் கொண்டிருத்தலும் கூடும் : அல்லது, குண்டக் கிராமத்திற் பிறந்தருளிய பெரியார் வழியைப் பின்பற்றியவர் என்ற கருத்தால் அங்ஙனம் கூறப்பட்டார் என்றலும் கூடும்'1என்றும் கூறுகின்றது. புத்தம் ஆருகதம் என்ற இரு சமயத்தவருள்ளும் துறவு பூண்டு உயர்ந்த சான்றோரைச் சமணர் என வழங்குப. இச்சமணர் அசோக மன்னனுடைய கல்வெட்டுக்களிலும் 2 குறிக்கப்படும் பழமையுடையராவர். இவ்வண்ணம் புறச்சமயத்தவர்களேயன்றி அகச் சமயத்தவர்களான பாசுபதரும்3கபாலிகளும் மாவிரதிகளும் ஞானசம்பந்தர்காலத்தில் இருந்திருக்கின்றனர். திருஞான சம்பந்தர், "காதலாற் சைவர் பாசுபதர்கள் வணங்கும் சண்பைநகர்"4என்று கூறுகின்றார். அவர்காலத்து வேந்தனான முதல் மகேந்திரவன்மன், தான் எழுதிய மத்தவிலாசமென்னும் நாடகத்தில் பாசுபதரோடு காபாலியையும் குறித்துள்ளான்.5 ஞானசம்பந்தரோடு உடன் பயின்ற திருநாவுக்கரசர் மாவிரதிகளையும் குறிக்கின்றார், பிற்காலக்கல்வெட்டுக்களிற் காணப்படும்6 காளாமுகசைவம் ஞானசம்பந்தர் திருப்பதிகங்களிற் குறிக்கப்படவில்லை. காபாலசமயம்மத்தவிலாசத்திலும்,பிற்காலக்கல்வெட்டுக்- ____________________________ 1. A Research on தேவாரமும் பெரியபுராணமும் conducted by Vidvan K. Vellai Varanan in the year 1934-36 in the Annamalai University.

2. Edicts of Asoka.

3. பாசுபத சைவமடம் ஒன்று திருவானைக்காவில் இருந்து அக்கோயில் காரியத்தையும் மேற்பார்வை செய்து வந்திருக்கிறது(A.R. 135 of 1936-7.)

4. ஞானசம். 86 : 4.

5. Bulletin of the School of Oriental Studies. London. Vol. V. P. 696-717. 6. A. R. for 1915. para 6, 11 ; A. R. for 1908 para.89;A. R. for 1924. para. 17.

திருநணாப்பதிகத்தில் ' "நானாவிரதத்தால் விரதிகள் நன்னாமமே யேத்திவாழ்த்த "(208:7) என்ற விடத்து விரதி மாவிரதிகளாகக் கருதுதற்கும் இடனுண்டு.