பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வார்ப்புரு:86

 -களிலும்1 காணப்படுமாயினும், ஞானசம்பந்தரால் தனியே குறிக்கப்படவில்லை. திருமயிலாப்பூரிலுள்ள திருக்கோயிலுக்குக் கபாலீச்சுரம் எனப்படுவது கொண்டும், :கற்றார்கள் ஏத்தும் கபாலீச்சுரம்"2 என்று ஞானசம்பந்தர் சிறப்பித்துப் பாடியிருப்பது நோக்கியும் காபாலிகள் அவ்ர் காலத்தே இருந்தமை நன்கு தெளிவாகிறது. அங்ஙனம் இருக்கவும், அங்கே"உருத்திர பல்கணத்தார்க்கு3" உணவிடும் கல்விழாவைஉயர்த்திப்பாடியவர், காபாலிகளைக் குறியாது ஒழிந்ததற்குக் காரணம் தெரிந்திலது. மாவிரதம் என்பது அகச்சமயம் ஆறனுள்4 ஒன்றாகும். இதனை மேற்கொண்டு ஒழுகிய மாவிரதிகளைத் திருநாவுக்கரசர் குறிப்பிடுகின்றார். கி. பி. பத்தாம் நூற்றாண்டில் மாவிரதிமடம் ஒன்று தென்னாட்டில் அருப்புக்கோட்டைப் பகுதியில் திருச்சுழியலைச் சேர்ந்த பள்ளிமடம் என்ற இடத்தில் இருந்ததாக அங்குள்ள சிவன்கோயில் கல்வெட் டொன்று5 கூறுகிறது. டாக்டர் பந்தர்க்கார் மாவிரதிகளைக் காளாமுகர் என்பர்6. மோனியர் வில்லியம்ஸ் என்பார் அவர்களைச்சைனர்என்று7 கூறுகின்றனர். மாவிரதிகளுக்குக் காளாமுகர் போலத் தீக்கையும் என்பு மாலையணிதல் முதலிய சரியைமுறையும் உண்டாதலால், டாக்டர் பந்தர்க்கார் மாவிரதிகளைக் காளாமுகர் என்றும், ஆருகதர்களிடையே, மாவிரதிகள்பால் காணப்படுவது போல, விரதங்கள் காணப்படுவது கண்டு மோனியர் வில்லியம்ஸ் என்பார் அவர்களைச் சைனர் என்றும் பிறழக் கூறிவிட்டனர்.

இனி, சிவனை வழிபடும் திருநெறியாகிய சைவம், இத் தென்னாட்டில் சரித்திர காலத்துக்கு முன்பிருந்தே நிலவி வருவதொரு தொன்மைச் சமயமாகும். இதற்குச் சைவம்-

1. A. R. for 1912. para. 29.

2. ஞானசம். 183.9 3 . ஞானசம். 183 : 1. 4 சிவஞானபாடியம்-

  அவையடக்கம்.
5. A. R. No. 423 of 1914.
6. Dr. Brandarkar’s 
  Vaishnavism. p. 118.
7. A. R. for 1915 para. 31.