பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 ச பிற்காலப் பல்லவர் காலத்தில் சைவ சமயம் - II

நாயன்மார் செய்த சமயத்திருப்பணிகள்

1. அப்பூதியடிகள்: அப்பரைத் தலைவராகக் கொண்டு அவர் பெயரால் தண்ணிர்ப்பந்தல் முதலிய அறச் செயல்களைச் செய்து வந்தார்." -

2. இடங்கழியார்: தம் நாட்டிற் கோயிற் பூசைகள் குறைவற்று நடக்க ஏற்பாடு செய்தவர்; சிவனடியார்க்குத் தம் பொருள்களை வழங்கியவர்."

3. இளையான்குடிமாறர்: சிவனடியார்க்கு உணவு படைத்தே வறியரானவர்.' -

4. கணநாதர்: நந்தவனம் அமைத்துக் காக்கும் முறை, மலர்களைக் கொய்க்கும் முறை, அவற்றைப் பல வகை மாலைகளாக்கும் முறை, அபிஷேகமுறைகள், விளக்கு எரிக்கும் முறை, கோயிலைத் தூய்மை செய்யும் முறை, திருமுறை எழுதும் முறை, பதிகங்கள் வாசிக்கும் முறை இவற்றில் பலருக்குப்பயிற்சி அளித்தார்.' 5. கலிக்கம்பர்: அடியார்க்கு உணவும் செல்வமும் வழங்கியவர்.' - -

6. கழற் சிங்கர். இவர் திருப்பணிகள் சென்ற அத்தியாயத்திற் குறிக்கப்பட்டுள்ளன.

7.காரி நாயனார்: மூவேந்தர்மீது கோவை பாடிப்பணம்பெற்றுப் பல கோயில்கள் கட்டினார்; அடியார்க்கும் பொருள் உதவி செய்தார்."

8. குங்குலியக் கலயர்: திருக்கடவூர்க் கோயிலில் நாடோறும் குங்குலியப் புகையூட்டி வந்தவர்; அப்பணியிலே தம் செல்வத்தை இழந்தவர்.' -

9. குலச் சிறை: சமணரை ஒழிக்கச் சம்பந்தரைப் பாண்டிய நாட்டுக்கு வரவழைத்தவர்; அடியார்க்கு உணவு முதலியன அளித்தவர்." -

10. கோட்புலி: அடியார்க்கு நெல் வழங்கியவர்: அடியார்க்கென வைக்கப்பட்ட நெல்லைச் செலவழித்த உறவினரைக் தொன்றவர்."

11. சத்தி நாயனார்: சிவனடியாரை இகழ்ந்தவரை நாவறுத்தவர்." -

12. சிறுத்தொண்டர் அடியார்க்குநாடோறும் உணவளித்தவர்; பைரவ அடியார்க்கு மகனைக் கொன்று அமுது படைத்தவர்."