பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமய வளர்ச்சி కాష్ట్రా 101

அம்மையார் சமயப்பற்று, அவர் அருட்பாடல்களைக் கொண்டே நன்கறியலாம். தம் மகனை அறுத்துச் சமைக்க உடன்பட்ட சிறுத்தொண்டர் மனைவியாரின் சமயப்பற்றுக்கு எல்லை கூற முடியுமா? அடியார்க்குச் சமைக்க, வயலில் விதைத்த நெல்லைக்கொண்டு வரும்படியோசனை கூறிய இளையான்குடிமாறர் மனைவியார்," நெல்லை வாங்கத் தம் தாலியைத் தந்த குங்குலியக் கலயர் மனைவியார், " விளக்கெரிக்கப் பணம் வேண்டித்தம்மை விற்க உடன்பட்ட கலிய நாயனார் மனைவியார்,' அடியார் கால்களைக் கழுவக் கணவனுடன் இருந்து நீர் வார்த்து வந்த கலிக்கம்பர் மனைவியார்' முதலிய மாதரசியர் சிவபக்தியை என்னென்பது! இத்தாய்மார்களின் ஒத்துழைப்பு இன்றேல் நாயன்மார்கள் சமயத்திருப்பணிகள் செய்திருத்தல் இயலுமா? சைவ சமயம் நன்கு வளர இப்பெண்மணிகளின் ஒத்துழைப்பும் ஒரு காரணமாக இருந்ததென்பது உறுதி.

நாயன்மாருள் சாதி வேறுபாடு இல்லை. பிராமணரான சம்பந்தர், அப்பருடைய கல்வியறிவு, அநுபவம், முதுமை இவற்றைக் கருதி அவரை அப்பரே என அழைத்தனர்."

பாணர் மரபினரான திருநீலகண்ட யாழ்ப்பாணரும் அவர் மனைவியாரும் இரவில் தங்கியிருக்க நீலநக்கர் தமது வீட்டு நடுவில் யாககுண்டத்தின் பக்கத்தில் இடவசதியளித்தார்." பிராமணரான அப்பூதியடிகள் வேளாளரான அப்பருடன் (தம் குடும்பத்தினருடன்) இருந்து உணவு உண்டவர்; அவருக்கும் பாதபூசை செய்தவர்." சிவநேசச்செட்டியார்தம் மகளை மணந்து கொள்ளும்படி பிராமணரான சம்பந்தரை வேண்டினார். அதற்குச் சம்பந்தர், நான் இவளை உயிர்ப்பித்தவன் ஆதலின் இவ்ஸ் எனக்கு மகள் போல்வாள்' என்று பதில் கூறினரே அன்றி, வேறு கூறாதது கவனிக்கத்தக்கது. சிவப்பிராமணரான சுந்தரர் உருத்திரகணிகையரான பரவையாரையும் வேளாளப் பெண்ணாகிய சங்கிலியாரையும் மணந்துகொண்டமை கவனிக்கத்தக்கது. அவரைத் தம் இரு பெண்களையும் மணந்து கொள்ளுமாறு வேளாளரான கோட்புலியார் வேண்டினார்." "தொழுநோயராயினும் ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும் சிவனடியாராயின், அவர் நாம் வணங்கும் கடவுளார்" என்பது அப்பர் வாக்கு. இவை அனைத்தையும் நோக்க, அக்காலச் சிவனடியாருள்சாதி வேற்றுமை காட்டப்படவில்லை என்பதும் பக்தி ஒன்றுக்கே மதிப்புத் தரப்பட்டது என்பதும் தெரிகின்றன. அனைவரும் கலந்து ஒன்றாய்ப் பழகுதல், பாடுதல், உண்ணுதல், உறங்குதல் சமய வளர்ச்சிக்குத் தேவையானது என்று கருதப்பட்டது.மேலும் சாதி வேறுபாடுகள் அற்ற சமணத்தையும் பெளத்தத்தையும் வெல்ல முயன்ற சைவத்தில்