பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1-பிற்காலப் பல்லவர்காலத்தில் சைவ சமயம் ميتي O2 1

அவ்வேறுபாடுகள் இருத்தல் இழிவென்று கருதியிருத்தல் இயல்புதானே! இங்ங்ணம் அடியாருள் சாதி பேதம் காட்டப்படாமை சைவ வளர்ச்சிக்குரிய காரணங்களுள் ஒன்றாகும்.

சமயப் போராட்டம்

பல்லவர்க்கு முற்பட்டகாலத்தமிழகத்தில் கவுணியன் விண்ணந்தாயன் முதலிய சிலரால் வெறுக்கப்பட்ட சமண-பெளத்த சமயங்கள், முற்காலப் பல்லவர் காலத்தில் மிகுதியாக வெறுக்கப் பட்டன; சிறப்பாகச் சமண சமயம் தண்டியடிகள், நமிநந்தியடிகள் முதலியோரைப் பரிகசிக்கத்தக்க நிலைக்கு இழிந்துவிட்டது என்பது முன்பு கூறப்பட்டது.அந்நிலைநாளடைவில் வளர்ந்து,அப்பர் சம்பந்தர் காலத்தில் உச்சநிலை அடைந்தது; அப்பர்-சம்பந்தரால் அழிவுற்றது. இவ்விரு சமயங்களும் எவ்வாறு செல்வாக்கிழந்தன என்பதை இங்குக் காண்போம்: -

பல்லவ நாட்டில்: அப்பர் நடு நாட்டைச் சேர்ந்த திருவா மூரினர்;" சைவப் பெற்றோருக்குப் பிறந்தவர்; பெற்றோர் இறந்தபின் பாடலியில் இருந்த சமண மடத்திற் சேர்ந்து பல ஆண்டுகள் அச்சமய நூல்களைக் கற்றுப் புத்தரை வாதில் வென்றார்; தருமசேனர் என்ற பட்டம் பெற்றார்; பிறகு தமக்கு உண்ட்ான சூலைநோய் சமணரால் நீங்காது வளரவே, தம் தமக்கையாரிடம் சென்றார்; சிவனருளால் நோய் நீங்கப்பெற்றார், சைவராக மாறினார். தங்கள் சமயத்திலிருந்து சென்று சைவரான அப்பரால் தங்கள் சமயத்துக்கு ஆபத்து நேரும் என்பதை உணர்ந்து அஞ்சிய சமண முனிவர்கள், மகேந்திரவர்மனைக்கொண்டு அவருக்குப் பல துன்பங்களை இழைத்தனர். அப்பர் சிவனருளால் அத்துன்பங்களிலிருந்து நீங்கினார். சிறந்த அறிஞனான மகேந்திரவர்மன் மனமாற்றம் அடைந்து சைவனானான்; பாடலியில் இருந்த சமண மடத்தையும் கோயிலையும் இடித்து, அச்சிதைவுகள் கொண்டு திருவதிகையில் குணபரஈச்சுரம் எனத் தன் பெயரால் சிவன்கோயில் கட்டினான். இது முன்பே கூறப்பட்டது. பாடலியில் புகழ்பெற இருந்த சமண மடத்தைப் பற்றிப் பிற்காலத்தில் ஒன்றும் கேட்கப்படாமையின்," 945قے[ மகேந்திரன் காலத்தில் அழிக்கப்பட்டதென்ற சேக்கிழார் கூற்று உண்மை எனக் கொள்ளலாம்.” அந்நிலையில் சம்பந்தர் தொண்டை நாட்டில் யாத்திரை செய்தார்; திருவோத்தூரில் இருந்த சமணரால் பரிகசிக்கப் பெற்றும் சிவனடியாரால் வளர்க்கப்பெற்றும் வந்த ஆண்பனையைக் குலையினும் படி சம்பந்தர் செய்தார். அந்த அற்புதம் கண்ட சமண முனிவர்கள் திருவோத்தூரை விட்டு அகன்றனர்."