பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமய வளர்ச்சி ༤པར་ཧཱ་ཧྥ 1. C)3

சமணரிடம் தருமசேனர் என்ற பட்டம் பெற்றுப்புத்தரை வாதில் வென்றபேரறிஞரான அப்பர் சைவரானதுசமணத்துக்கு இடுப்பு ஒடிந்த மாதிரியாகும். போதாக் குறைக்கு நாட்டையாண்டவனும் பல்கலை விற்பன்னனுமான மகேந்திரவர்மன் மதம் மாறிச் சமண மடத்தையே அழித்துவிட்டான் எனின், பல்லவ நாட்டில் சமணர் செல்வாக்கு அழிந்துவிட்டது என்பது பொருளன்றோ? மதம் மாறிய பல்லவன் பல புதிய கோயில்களைச் சிவனுக்கமைத்தான் மதம் மாறிய அப்பர் சிவன் கோயில் தோறும் சென்று, பதிகம்பாடி, மக்கட்குச் சிவநெறியின் சிறப்பை உபதேசித்தார்; சம்பந்தரும் தொண்டை நாட்டில் யாத்திரை செய்து பதிகங்கள் பாடினார். இம்மூவர் முயற்சியால் தொண்டை நாட்டில் சைவசமயம் புத்துயிர் பெற்று வளரத் தொடங்கியது.

சோழநாட்டில்: அப்பர் பழையாறை வடதளிக்கு வந்தபொழுது அத்தளி சமணர் கையில் இருந்ததையும் பூசையற்று இருந்ததையும் கேட்டு, அங்கு உண்ணாவிரதம் இருந்தார். சோழ அரசன், இதனை உணர்ந்து, அங்கிருந்த ஆயிரம் சமணரையும் விரட்டியடித்துக் கோயிலைப் பழையபடி நன்னிலையில் அமைத்தான். இதனால் சோணாட்டில் சமணர் செல்வாக்கும் குறைந்தது. அந்நாட்டில் போதிமங்கை என்னும் இடத்தில பெளத்தர்கள் இருந்தார்கள். சம்பந்தர் அவர்களை வாதில் வெல்ல, பலர் சைவராயினர்." இங்ங்னம் சோழநாட்டில் அப்பராற் சமணமும் சம்பந்தராற் பெளத்தமும் செல்வாக்கிழந்தன. - -

பாண்டிய நாட்டில்: பாண்டிய அரசனான நெடுமாறன் சமணச் சார்புடையவன் ஆதலின், சமண சமயமே அங்குச் செல்வாக்குப் பெற்றிருந்தது. ஆயின், பாண்டியன் மனைவியாரும் அமைச்சர் குலச் சிறையாரும் செய்த முயற்சியின் பயனாகச்சம்பந்தர்பாண்டிய நாட்டை அடைந்தார்; சமணரால் தீர்க்க முடியாதிருந்த வெப்பு நோயை (Hectic Fever)ப் பதிகம் பாடித் தீர்த்தார், சமணரை நீர் வாதத்திலும் நெருப்பு வாதத்திலும் வென்றார். அரசன் மனம் மாறிச் சைவனானான். பெருங்குன்றத்தைச் சேர்ந்த எண்ணாயிரம் சமணத்துறவிகளும் கழுவேறினர்." "மன்னவன் எவ்வழி மன்னுயிர் அவ்வழி ஆதலின், நெடுமாறன் சைவனானதும் பாண்டிய நாட்டில் சைவம் தழைக்கத் தொடங்கியது.

இங்ங்ணம் பல்லவ நாட்டிலும் சோழ நாட்டிலும் பாண்டிய நாட்டிலும் இருந்த சமணரும் பெளத்தரும் அப்பர்- சம்பந்தராலும் பல்லவ சோழ-பாண்டிய மன்னராலும் ஒடுக்கப்படவே, தமிழகத்தில் அவை செல்வாக்கிழந்தன. சமண முனிவர்கள் ஆயிரக் கணக்கில் தமிழகத்தை விட்டு நீங்கித் தங்கள் புகலிடமாகிய கங்க நாட்டை