பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 ச. பிற்காலப் பல்லவர் காலத்தில் சைவ சமயம் - II

அடைந்தனர்.அங்கும் இராட்டிரகூடநாட்டிலும்தங்கள் செல்வாக்கைப் பெருக்கிக் கொண்டனர்."

வைணவமும் பெளத்த-சமணங்களும்:அப்பர்-சம்பந்தர்க்குப் பிறகு தமிழகத்தில் எஞ்சியிருந்த சமண-பெளத்தர்கள் கி.பி.8-ஆம் நூற்றாண்டில் வைணவர் சீற்றத்திற்கு ஆளாயினர் என்பது தெரிகிறது. பல்லவமல்லன் அம்மதத்தார் அநுபவித்து வந்த நிலங்களைக் கைப்பற்றிப் பிராமணருக்களித்தான். அவன் ஆட்சியில் அச்சமயத்தார் கழுவேற்றப்பட்டனர் என்பதைக் காஞ்சிவைகுந்தப் பெருமாள்கோயிற் சிற்பங்கள் உணர்த்துகின்றன." வைணவர் அப்புறச்சமயத்தாரை எந்த அளவு வெறுத்தனர் என்பதை, .

. வெறுப்பொடு சமண மிண்டர் விதியில்சாக் கியர்கள் நின்பால்

பொறுப்பரி யனகள் பேசிப் போவதே நோய தாகி குறிப்பெனக் கடையு மாகில் கூடுமேல் தலையை ஆங்கே அறுப்பதே கருமம் கண்டாய் அரங்கமா நகரு ளானே." என்னும் தொண்டரடிப்பொடியாழ்வார்பாசுரத்திலிருந்து நன்கறியலாம். சங்கரரும் பெளத்தரும்: சங்கரர் (கி.பி.788-820) காஞ்சியில் இருந்த புத்தரை வாதில் வென்று, அங்கொருமடத்தை நிறுவினார்; கும்பகோணத்திலும் ஒன்றை நிறுவினார். அவர் சிவன், திருமால், அம்பிகை வழிபாட்டினை ஆதரித்தார்; நரபலி மிருக பலிகளைக் கண்டித்தார்; அவரது சேவையால் ஸ்மார்த்த மதம் நாட்டிற் பரவத் தொடங்கியது." -

இங்ங்னம் சமணமும் பெளத்தமும் தமிழகத்தில் தம் செல்வாக்கை 7,8-ஆம் நூற்றாண்டுகளில் இழந்து விட்டமையால், 9-ஆம் நூற்றாண்டினரான சுந்தரர் பதிகங்களிலும் மாணிக்கவாசகரது திருவாசகத்திலும் சமணபெளத்த கண்டனங்கள் குறிக்கத்தக்க அளவு இல்லை; சைவ சமய விளக்கமும் மிகுதியாகத் தேவைப்படவில்லை என்பன இங்கு அறியத்தகும்.

அப்பர்-சம்பந்தர் தலயாத்திரை: சமண-பெளத்தங்களை வென்றமை சைவத்திற்கு வெற்றியே ஆயினும், சைவ சமய வளர்ச்சிக்குரிய ஆக்கவேலைகள் தேவை ஆதலின், அப்பரும் சம்பந்தரும்நாட்டில் இருந்த பல கோயில்கட்கும் யாத்திரைசென்றனர். அப்பர் ஏறத்தாழ 126 கோயில்கட்குச்சென்று பதிகம்பாடினார். சம்பந்தர் 216 கோயில்கட்குச் சென்று பதிகம் பாடினார். இவ்விருவரும் நேரே செல்லாமல் பதிகங்களிற் குறிப்பிட்ட தலங்கள் சில; அப்பரும் சம்பந்தரும் தனித்தனியே சென்று பதிகம் பாடிய கோயில்கள் பல;