பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 = பிற்காலப் பல்லவர் காலத்தில் சைவ சமயம் - II

அவ்வப்பொழுது புதிதாகக் குடியேறிய குடி, புத்துர், மங்கலம், புரம் என்று முடியும் ஊர்களில் புதிய கோயில்கள் உண்டாயின. இங்ங்ணம் பல வழிகளில் ஏற்பட்ட கோயில்களுட் பலவே கி.பி.7-ஆம் நூற்றாண்டில் அப்பர் - சம்பந்தராலும் பின்னர் சுந்தரர், மாணிக்கவாசகராலும் பாடப் பெற்றன.

தில்லையும் திருவாரூரும்: நாயன்மார் காலத்தில் இருந்த சுமார் 325 கோயில்களிற் சிறப்புற்றவையாக இருந்தவை தில்லைக் கூத்தப்பிரான் திருக்கோயிலும் திருவாரூர்ப் பூங்கோயிலுமே ஆகும். ஏனைய கோவில்கள் முதன்மை பெறுதற்கு முன்பிருந்தே தில்லைக் கோயில் தில்லைவாழ் அந்தணர் மூவாயிரவரால் பூசிக்கப்பெற்றதாலும் கூத்தப் பெருமான் கோயில் கொண்ட முதலிடமாதலாலும், சைவவுலகில் தில்லை முதலிடம் பெறலாயிற்று. அம்முதன்மை கருதியே நாயன்மார் திருப்பதிகங்கள் அங்கு அடக்கம் செய்யப்பெற்றனவாதல் வேண்டும். பேரம்பலம், சிற்றம்பலங்களைப் பெற்றதில்லைத்திருக்கோயிலின் பழமையும் பெருமையும் உணர்ந்தே பிற்காலச் சோழர்கள் அதனைத் தம் உயிரினும் மேலாகப் பாதுகாத்துச் சிறப்பித்தனர். தில்லைப் பெருமானைத் தம் குலநாயகன் என்று கூறிக் கொண்டனர். பிற கோயில்களை நோக்கத் திருவாரூர்க் கோயில் அப்பர்-சம்பந்தர் காலத்திற் சிறந்து விளங்கியதாயினும் சுந்தரர் காலத்தில் அது மிக்க சிறப்புற்றது. மநுநீதிச் சோழன் தலைநகரம் திருவாரூர், சப்த விடங்க தலங்களில் முதன்மையானது. சுந்தரர் தாயார் கெளதமி கோத்திரத்தவரும் சைவ சித்தாந்த வல்லவருமாகிய திருவாரூர் ஞான சிவாசாரியார் மகளார்; எனவே திருவாரூர் சுந்தரர்க்குப்பாட்டனார் ஊர் அவர் முதல் மணம் புரிந்த ஊரும் அதுவே: அவர் அங்குத்தான் தேவாசிரிய மண்டபத்தில் இருந்த நாயன்மார்களையும் முற்பட்ட நாயன்மார் திருவுருவங்களையும் பணிந்து திருத்தொண்டத் தொகை பாடினார்." இத்தகைய தொகை பாடுதற்குக் காரணமான தேவாசிரிய மண்டபம் வேறெக் கோயிலிலும் அக்காலத்தில் இருந்திலது. இச்சிறப்புடைக்காரணங்களால் திருவாரூர் சிறந்த தலமாகக் கருதப்பட்டது. -

கோயிற் பெயர்கள்:பாடல் பெற்ற கோயில்கள் ஈசுவரம், பெருங் கோயில், ஆலக்கோயில், கரக் கோயில், ஞாழற் கோயில், கொகுடிக் கோயில், இளங்கோயில், மணிக் கோயில், தூங்கானை மாடம் எனப் பலவாகப் பெயர்களைப் பெற்றிருந்தன என்பது மூவர் திருப்பதிகங் களிலிருந்து தெரிகிறது. (1) பெருங்கோயில் என்பது மாடக் கோயில் என்றும்பெயர் பெறும்.அது செய்குன்றின்மேல்கட்டப்பட்டது. அப்பர் காலத்தில் 78 பெருங்கோயில்கள் இருந்தன." பெருங்கோயில்கள்