பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமய வளர்ச்சி ༤གྲོགས་ན་> 1 C97

கோச்செங்கணான் எடுப்பித்தவை. இதனைத் திருமங்கையாழ்வார் வாக்கால் உணரலாம். (2) ஞாழற் கோயில் என்பது ஞாழல் மரம் இருக்கப் பெற்ற கோயில் ஆகும். திருப்பாதிரிப்புலியூர்க் கோயில் ஞாழற் கோயில் எனப் பெயர் பெற்றிருந்தது.” (3) கொகுடிக் கோயில் என்பது கொகுடி என்னும் ஒருவகை முல்லை நிறைந்த இடத்தில் அமைந்த கோயில் எனப் பொருள்படும். திருக்கருப்பறியலூரில் உள்ள கோயில் இப்பெயரையுடையது.” (4) ஆலக்கோயில் என்பது ஆலமரத்தைத் தலமாகப் பெற்ற கோயில் என்று கூறலாம். திருக்கச்சூரில் (செங்கற்பட்டுக் கருகில்) உள்ளது இப்பெயர் பெற்றது." (5) இளங்கோயில் என்பது பழைய கோயிலைப் புதுப்பிக்குங்கால் அதற்கு அண்மையில் இறைவனை எழுந்தருளுவித்து வழிபாடு புரிந்த கோயில் இளங்கோயில் எனப்பட்டது. திருமீயச்சூர்க் கோயில் இப்பெயர் பெற்றது." சேய்மையில் உள்ளார் தாம் வழிபடும் கடவுளைத் தம்மூர்க்கு அணித்தாக எழுந்தருளுவித்து எடுப்பித்த கோயிலும் இளங்கோயில் எனப்படும்.” (6) கரக் கோயில் என்பது தேர்வடிவமாகச் சக்கரங்களோடு அமைக்கப் பெற்ற கோயிலாகும். கடம்பூர்க் கோயில் இப்பெயர் பெற்றது." (7) மணிக் கோயில் என்பது மணிகள் பரப்பினாற் போன்ற மேற்கூரை அமைப்புடைய விமானம் கொண்ட கோயிலாகலாம் என்று அறிஞர் சதாசிவப் பண்டாரத்தார் கருதுகிறார். உண்மை தெரியவில்லை. (8) தூங்கானை மாடம் என்பது வராஹ மிஹிரர் குறித்துள்ள பலவகை விமானங்களில் கஜப்பிரஷ்ட விமானம் கொண்ட கோயில். பெண்ணாகடம் கோயில் தூங்கானை மாடம் எனப்பட்டது." பல்லவர் காலத்தில் இத்தகைய கோயில்கள் பல கட்டப்பட்டன. அவற்றுள் திருத்தணிகைக் கோயில் ஒன்றாகும். (9) ஈசுவரம் என்பது சிவன் கோயிலின் பொதுவான பெயர்.

கோயில் ஆட்சி: தமக்கு வேண்டிய பட்டாடைகள், நகைகள் முதலியவற்றைப் பண்டாரத்திலிருந்து கொடுக்கும்படி அருளவேண்டும் என்று சுந்தரர் நாகைக் காரோணத்திற் கடவுளை வேண்டினார். இதனால் அவர் காலத்தில் கோயில் பண்டாரம் இருந்தது என்பது தெளிவாகிறது. அப்பர்-சம்பந்தர் திருவிழிமிழலையில் பொற்காசு பெற்றமையும், வேள்வி செய்யச் சம்பந்தர் ஆவடுதுறையில் ஆயிரம் பொற் காசுகள் பெற்றமையும் அவ்வக்கோயில் பண்டாரங்களில் என்பது உய்த்துணரத்தக்கது. பல்லவர் காலத்தில் கோயில் ஆட்சி செவ்வனே நடைபெற்றது என்பது முன்னதிகாரத்தில் விளக்கப்பட்டதன்றோ? -