பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமய வளர்ச்சி

1. ஆராய்ச்சிக்கு உரிய மூலங்கள்

நாம் இங்கு ஆராய எடுத்துக்கொண்ட பொருள், தென் இந்தியாவில் காஞ்சிப் பல்லவர் காலத்தும் பிற்காலச் சோழப் பேரரசர் : காலத்தும் (கி.பி. 300-1300) உண்டான சைவ சமய வளர்ச்சி' என்பதாகும். தென் இந்தியா என்னும் சொல், துங்கபத்திரை - கிருஷ்ணையாறுகட்குத் தென்பாற்பட்ட நிலப் பகுதியைப் பொதுவாகக் குறிப்பதாயினும், இங்கு வடவேங்கடம் தென் குமரிக்கு இடைப்பட்ட பழைய தமிழகத்தையே சிறப்பாகக் குறிப்பதாகக் கொண்டு, ஆராய்ச்சி நிகழ்த்தப்படுகிறது.

சங்ககாலம்

பல்லவர் காலம் ஏறத்தாழக் கி.பி. 300-900 எனலாம். அதற்கு முற்பட்ட காலம் சங்ககாலம். சங்க காலத்தில் சைவ சமயமும் பிற சமயங்களும் பற்றிய விவரங்களை அறியத் தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப் பாட்டு, திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் சங்ககால நூல்கள் பெருந்துணை புரிவன. சிந்து வெளிநாகரிககாலத்திலிருந்துகி.பி.மூன்றாம் நூற்றாண்டுவரை வட இந்தியாவிலும் டெக்கானிலும் சைவமும் பிற சமயங்களும் எவ்வாறு இருந்தன என்பதை டாக்டர் பந்தர்க்கர் போன்ற அறிஞர்கள் ஆராய்ந்து வெளியிட்டுள்ளனர். அவ்வாராய்ச்சி நூல்களும் சங்ககாலச் சைவத்தை அறியச் சிறிதளவு பயன்படும். வால்மீகி இராமாயணமும் வியாச பாரதமும் தமிழகம் பற்றிக் கூறுவன ஆதலின், அவையும் இம் முயற்சியில் சிறிதளவு உதவக்கூடியவை. х -

பல்லவர்காலம்

பல்லவர் காலத்தில் பல்லவர்கள் ஏறத்தாழக் கிருஷ்ணையாறு முதல் தெற்கே புதுக்கோட்டை வரையில் தங்கள் பேரரசை ஏற்படுத்தி