பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமய வளர்ச்சி =छुध्र 109

இறைவன் 'ஏழிசையாய் இசைப்பயனாய்' இருப்பவன்; 'பண் அவனே, பண்ணின் திறனும் அவனே."

பண்ணும்பதம் ஏழும்பல ஒசைத்தமிழ் அவையும்

உண்ணின்றதோர் சுவையும்.உறு தாளத்தொலி பலவும்

விண்ணும்முழு தானானிடம் விழிம்மிழ லையே." என்பது நாயன்மார்கண்ட உண்மை. சமயத்தத்துவங்களில் உயர்ந்தது நாததத்துவம், நாதத்திலிருந்து இசை தோன்றுகிறது. இறைவனே இசை வடிவமாக இருக்கிறான் என்பது சைவசமயக் கொள்கை. இதனால் இசையோடு தோத்திரங்களைப் பாடுவதால் இறைவன் மகிழ்வான், அருள்புரிவான் என்று சம்பந்தர் கூறியுள்ளார். கோயிலிற் சென்று அலகிடல், விளக்குப் போடுதல், மலர் தொடுத்துச் சாத்துதல் முதலியவற்றால் உண்டாகும் புண்ணியத்தைவிட இசையுடன் தோத்திரம் பாடுவது மிக்க புண்ணியத்தைத் தரும் என்று அப்பர் குறித்துள்ளது நோக்கத்தக்கது. 'தமிழோடு இசை கேட்கும் இச்சை யால் நித்தம் சம்பந்தர்க்குக் காசு நல்கினி' என்று சுந்தரர் கடவுளை நோக்கிக் கூறியுள்ளார். இசையை இறைவன் விரும்புகின்றான் என்பதை இஃது உணர்த்துகிறதன்றோ? இந்த விவரங்கள், கோயிலில் இசை பயிலப் பட்டதன் காரணத்தை விளக்கவல்லன.

ஐயாறு, ஆரூர், நாகை, நின்றியூர்," விழிமிழலை, முதுகுன்றம், பெருந்துறை, நெடுங்களம், பூவணம், பழனம், குடமூக்கு, கானூர், இலம்பையங்கோட்டுர், சீகாழி, ஐயாறு, நள்ளாறு, ஆமாத்துர், திருக்களர், கடம்பூர், புகலூர், மழபாடி, தென்குடித் திட்டை, மாகறல், தேவூர், நல்லூர், நெல்வேலி, பரிதிநியமம், இடைவாய்," துறையூர், வெஞ்சமாக் கூடல்' முதலிய ஊர்க் கோவில்களில் நடனமாதர் இருந்து நடனமாடினர். வீணை, கின்னரம், குடமுழா கொக்கரை, முழவம், குழல், பறை, தாளம், யாழ், பிடவம், கல்லலகு, சச்சரி, கொடுகொட்டி, தக்கை, பேரி,தண்ணுமை, தகுணிதம், சங்கிணை,சல்லரி, தத்தளகம், துந்துமி, மொந்தை' தண்டு, கல்லவடம், கூடரவம்" முதலிய பல்வேறு இசைக்கருவிகள் கோயில்களிற் பயன்பட்டன. இவ்விவரங்களை நோக்க, இசையும், நடனமும் சிவ வழிபாட்டில் இன்றியமையாத பகுதிகளாக விளங்கின என்பது தெரிகிறது.

இசை அனைவர் உள்ளத்தையும் உருக்கவல்லது. அது குழல், யாழ், வீணைஇவற்றுடன் பயிலப்படுகையில் மிக்க இனிமைபயக்கும். பக்திச் சுவை பொருந்திய பாடல்கள் இசைக் கருவிகளுடன்