பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 1 O பிற்காலப் பல்லவர்காலத்தில் சைவ சமயம் - II

பாடப்படும்பொழுது மக்கள் உள்ளங்களைக் கவரும் என்பது உறுதி. அப்பாடல்கள் மக்களது தாய் மொழியில் பாடப்பட்மையால், மக்கள் உள்ளங்களில் அவற்றின் பொருள் பதிந்து, பக்தியை உண்டாக்கின. விழாக்காலங்களிலும் பிறகாலங்களிலும் பண்ணிசையுடன் சிவபெருமான் ஆடிய பலவகை நடனங்களையும் பிற நடன வகைகளையும் நடனமாதர் நடித்துக் காட்டினமை மக்கட்குச் செவிவிருந்தும் விழி விருந்துமாய் அமைந்தன. இவ்விரு கலைகளும் காம இன்பத்தைப் பயப்பவை எனச் சமண-பெளத்தரால் விலக்கப்பட்டன. அம்மையப்பனான மாதொரு பாகனை வழிபட்ட சைவர்க்ட்கு இவை வெறுப்பைத்தராது இன்பத்தையே தந்தன. இசையும் நடனமும் பொதுமக்களைக் கோயில்கட்கு இழுத்தன; உள்ளங்களைக் குழைவித்தன; கலைகளின் அருமையை உணர்த்தின; கலையே உருவான கடவுளிடம் மனத்தைச்செலுத்தின; தம்மை மறந்து ஆடவும் பாடவும் செய்தன. சிவபெருமான் ஆடிய பலவகை நடனங்கள் திருமூலரால் கூறப்பட்டன; அவை சிற்பங்களாகக் கயிலாசநாதர் கோயிலில் காட்சிளியத்தன; தேவார ஆசிரியர் காலத்தில் அவற்றை நடன மகளிர் ஆடிக்காட்டினர். இறைவனுக்கே நடராசன் என்ற பெயர் உண்டெனின் அவன் சமயம் நடனக்கலையை ஒரு பகுதியாகக் கொண்டது என்பது கூறாதே அமையுமன்றோ? துறவு நிலையில் இருந்து முத்திபெறலாம்; இன்றேல் இல்லறத்திலிருந்து கொண்டே இறைவனைப்பாடி ஆடிப்பரவுவதாலும் முத்திஅடையலாம் என்னும் பக்திமார்க்க போதனை இல்லறத்தார் உள்ளங்களைக் கவர்ந்தது. மக்கள் பண்ணிறைந்த பாடல்களைப் பாடியும் ஆடியும் இறைவனை வழிபடலாயினர். இவ்வாறு எல்லோரும் எளிதிற் பின்பற்றும்படியான பக்தி மார்க்கத்தை நாயன்மார் போதித்தமையாற்றான் சைவ சமயம் நாட்டில் நன்கு பரவலாயிற்று.

சைவ மடங்கள் : திருவதிகை முதலிய இடங்களில் மடங்கள் இருந்தன என்பது முன்பு கூறப்பட்டதன்றோ? சமண பெளத்த மடங்கள் 'யிற் சிறந்திருந்த அக்காலத்தில், அச்சமயங்களை ஒழிக்க சைவ சமயத்தைச் சேர்ந்த இந்த மடங்களும் بابا |க்கூடங்களாகவும் சமயக் கல்லூரிகளாகவும் இருந்திருந்தல் ாடும் என்பது கூறாதே அமையுமன்றோ? கம்பவர்மன் காலத்து யூர் மடத்தில் சிறந்த அறிவாளி மடத்துத் தலைவராக இருந்தார் தை நோக்க, சைவ மடங்களில் துறவிகள் இருந்து பொதுக் lயும் சமயக் கல்வியும் அளித்து வந்தனர் எனக்கோடல் நத்தமானது. அவை அப்பர் - சம்பந்தர் போலத் தலயாத்திரை த அடியார்கள் தங்க வசதியும் அளித்தன.