பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 ச. பிற்காலப் பல்லவர் காலத்தில் சைவ சமயம்-1

முதலிய சமயங்கள் வளர்ச்சிபெறவில்லை; போதாக்குறைக்குச்சங்கரர் (கி.பி.788-820) தோன்றித் தம் அத்வைத சமயத்தை நாடெங்கும் பரப்பியதுடன், முன் சொன்ன நரபலி, கட்குடி கொண்ட இவ்வகைப் புறச் சமயங்களை வன்மையாகக் கண்டித்து, அவற்றை ஒழிக்க முற்பட்டார்." இவ்விரு காரணங்களாலும் இச்சமயங்களின் செல்வாக்குப்பின் நூற்றாண்டுகளில் தமிழகத்திற் குறையலாயிற்று.

சேரமான் பாடல்கள். இவர் பாடிய பொன் வண்ணத்து அந்தாதி அகப்பொருள் துறையில் பக்திச்சுவை வைத்துப் பாடப்பட்ட 100.பாக்களைக் கொண்டது. இவர் தம்மைத் தலைவியாகவும், சிவனைத் தலைவனாகவும் வைத்துப் பாடியுள்ள இப்பாக்களும் திருவாரூர் மும்மணிக் கோவைப் பாடல்கள் முப்பதும் படிக்க இன்பம் பயப்பவையாகும். இவர் பாடிய திருக்கயிலாய ஞானவுலா மிக்க இனிமையும் அழகும் உடையது. சிவபிரானுடைய உலா வருதலைக் கண்டஏழு பருவமங்கைகளும் அவரைக்கண்டுகாதல் கொண்டதாகக் கூறுவது இந்நூல். சிவன்மீது காதல் கொண்டு அவனை அடையப் பெறாமையால் வருந்திய மகளிர்அவன்மீது மடல்வண்ணம் பாடுதல் மரபென்பதும்," தம் காதலை உணர்த்தி வெண்பாப்பாடுதல் மரபென்பதும்' இந்நூலுட் கூறப்பட்டுள்ளன. எனவே, கடவுளரிடம் காதல்கொண்டமகளிர் அக்கடவுளர்ைப்பற்றிப்பாடிய பாடல்நூல்கள் சிலவேனும் அக்காலத்தில் இருந்திருந்தல் வேண்டும் என்பது இவ்விவரங்களால் தெரிகிறதென்னலாம். х

மாணிக்கவாசகர். இவர் மதுரையை அடுத்த வாதவூரினர்; ஆமாத்தியப் பிராமணர்; பாண்டியன்.அமைச்சர்.திருப்பெருந்துறையில் குதிரை வாங்கச் சென்ற இவர், அங்குக் குருவடிவில் இருந்த சிவனைக் கண்டு சீட்ராகி உபதேசம் பெற்றார், குதிரை வாங்க வைத்திருந்த பொருளைக் கொண்டு கோயில் கட்டினார்; பின்னர் பாண்டியன் சீற்றத்துக்காளானார். இவரைக் காக்கச் சிவன் நரியைப் பரியாக்கியும் பிட்டுக்கு மண் சுமந்தும் திருவிளையாடல்கள் புரிந்தார். பாண்டியன் இவரது பக்திப் பெருக்கை அறிந்து வேலையிலிருந்து விடுதலை அளித்தான்.பிறகு இவர்பெருந்துறை, உத்தரகோசமங்கை முதலிய பல தளிகளைத் தரிசித்து, இறுதியில் தில்லையில் தங்கித் திருவாசகத்தையும் திருக்கோவையாரையும் பாடினார், ஈழத்திலிருந்து தில்லைக்கு வந்த ஈழத்தரசனது ஊமை மகளைப் பேசவைத்தார்; அவ்வரசனுடன் வந்த பெளத்த துறவியை வாதில் வென்றார் என்பன இவர் வரலாற்றுக் குறிப்புக்கள். இவர் நூல்களைக் கொண்டு அறியத்தகுவன: இவர் காலத்துப் பாண்டியன் சிறந்த சிவபக்தன்." அவன் பெயர் வரகுணன். அவன் இரண்டாம் வரகுணன் - -