பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமய வளர்ச்சி དབྱུ5 d f..5

(கி.பி.862-880) என்பது அறிஞர் பலர் கருத்து.' மணிவாசகர்க்கு முற்பட்ட நாயன்மாரால் பாடப்பெற்ற பாண்டிநாட்டுத் தலங்கள் 14. அவை மதுரை, ஆப்பனுர், பரங்குன்றம், ஏடகம், கொடுங்குன்றம், புத்துர், புனவாயில், இராமேசுரம், ஆடானை, கானப்பேர், பூவணம், சுழியல், குற்றாலம், நெல்வேலி என்பன. மணிவாசகராற் பாடப்பெற்ற புதிய தலங்கள் உத்தரகோசமங்கை, திருப்பெருந்துறை,' அரிகேசரி நல்லூர் (சின்னமனூர்), பெருங்கருனை முதலியன.' இவற்றுள் அரிகேசரி.நல்லூர் என்பது அரிகேசரி என்ற நெடுமாறன் பெயர் கொண்டதாகும்.அங்குள்ள கோயில் அவன் பெயரனான இராசசிம்மன் கட்டியது.' மணிவாசகர் அக்கோயிற் பெருமானைக் கலையார் அரிகேசரியாய் என்று விளித்துள்ளார். பெருங்கருணை என்பது பாண்டியநாட்டுத்தலங்களுள் ஒன்று. சுவாமி பெயர்திருவேளைக்கார மூன்றுகை ஈசுவரம் உடைய மஹாதேவர்" என்பது. இவர் காலத்தில் தில்லை முன்றிலில் பள்ளிகொண்ட பெருமாளின் சிறு கோவில் இருந்தது.' - .

மணிவாசகர்காலத்தில், சங்கரரது அத்வைதக் கொள்கைநாட்டில் மிகுதியாகப் பரப்பப்பட்டது போலும் இவர் அதனை மிண்டிய மாயாவாதம் என்னும், சண்டமாருதம் சுழித்து அடித்து ஆர்க்கிறது. என்று குறித்துள்ளார்.பெண்கள் பலவகை விளையாட்டுக்களின்போது இறைவனுடைய சிறப்பியல்புகளைப் பலபடியாக எடுத்துக் கூறி ஆடுவதாக இவர்பாடியுள்ளார்.அவ்விளையாட்டுக்கள்-(1) அம்மானை, (2) பொற்சுண்ணம் இடித்தல், (3) தும்பியாடல், (4) தெள்ளேணம் கொட்டல், (5)சாழல், (6) திருப்பூவல்லிகொய்தல், (7) உந்திபறத்தல், (8) தோள் நோக்கம் ஆடல், (9) ஊசலாடல் என்பன." இவ்வகை விளையாட்டுக்களில் இறைவன் புகழைப் பாடியாடுதல் சம்பந்தர் காலத்திலும் இருந்தது என்பது தெரிகிறது." -

திருவாசகத்தின் உயிர்நாடி முதல் ஏழு திருமுறைகள் - பண்ணோடும் தாளத்தோடும் பாடத்தக்கவை. ஆயின் திருவாசகப் பாடல்களுள் பெரும்பாலன அத்தகையவை அல்ல. முன்னவற்றுள் சமயக் கொள்கை காணப்படும் திருவாசகத்தில் அது காணப்பெறாது, மாணிக்கவாசகர் எங்ங்ணம் உழன்று உழன்று இறைவனது அருளைப் பெற்றார் என்பதே இந்நூலிற் காணப்படுவது. இது படிப்பவர் உள்ளத்தை உருக்கும் வன்மை வாய்ந்தது. "உன் குறைகளை ஒப்புக்கொண்டு கடவுளுக்கு முன் அழு, அவனை அடையலாம்" என்பது திருவாசகத்தின் உயிர் நாடிப் பகுதிகளில் ஒன்று. தம் குறைகளை உள்ளவாறு உணர்ந்து வருந்திக் கடவுள்முன் அழுத்ல் என்பது எல்லோருக்கும் எளிதில் இயல்வதன்று. “கடவுளிடம் என்றும்