பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமய வளர்ச்சி ல் 117

இசைக் கருவிகளுடனும் பாடப்பட்ட திருப்பதிகங்களில் மனம் கொண்டனர். -

6. சைவத்திற்கு இடையூறு செய்துவந்த சமண-பெளத்த சமயத் தலைவர், அப்பர் சம்பந்தர் முதலியோரால் அடக்கப்பட்டுச் செல்வாக்கிழந்தனர். o

7. நாயன்மாருள் பிராமணர் முதல் பறையர் ஈறாக இருந்தனர். ஒரே சமயத்தைச் சேர்ந்த அவருள் வேறுபாடுகள் கருதப்படவில்லை. அனைவரும் பக்தி ஒன்றுக்கே மதிப்பீந்தனர். - -

8. நாயன்மார் வீட்டுப் பெண்மணிகள் சைவத்தில் மிக்க பற்றுக்கொண்டனர்; தம் கணவருடன் சமயவளர்ச்சிக்காக ஒத்துழைத்தனர். அக்காலப் பெண்கள் அம்மானை முதலிய பலவகை விளையாட்டுக்களிலும் சிவன் சிறப்பியல்புகளைக் குறிக்கும் பாக்களைப் பாடினர். திலகவதியார், மங்கயைர்க்கரசியார், காரைக்கால் அம்மையார் முதலியோர் பக்தி குறிப்பிடத்தக்கது. - - 9. சைவசமயத்தைச் சேர்ந்த பாசுபதர், காபாலிகர் முதலிய பல பிரிவினர் தமிழகத்தில் இருந்தனர். அவருள் காபாலிகளும் வாம மார்க்கத்தினரும் பைரவர்க்கும் காளிக்கும் நரபலி கொடுத்து வந்தனர். ஆயின், இவர்கள் செல்வாக்குத் தூய சைவ வளர்ச்சியாலும் சங்கரர் போராட்டத்தாலும் குறைந்துவிட்டது. -

10. ஐந்தெழுத்தைச் செபித்தல், அகத்திலேயே கடவுளை வழிபடல், அர்ச்சனைபுரிந்து அமுதுபடைத்து வழிபடல், பாடல்களைப்பாடி ஆடுதல் முதலிய பலவகை வழிபாட்டு முறைகள் இருந்தன. அடியார்க்கு உணவு படைத்தல், அடியார் வேண்டியன தருதல் என்பது சிறந்த வழிபாடாகக் கருதப்பட்டது.

11 மடங்கள்கோயில்களைச்சார்ந்திருந்தன.அவற்றில் பொதுக் கல்வியும் சமயக்கல்வியும் தரப்பட்டன. தலயாத்திரை செய்யும் அடியார்கள் உண்டியும் உறையுளும் பெறும் இடங்களாகவும் அவை இருந்தன. - 12. அவரவர் தகுதிக்கு ஏற்றவாறு கடவுளை வழிபடலாம், கடவுள் அருள்புரிவான் என்று. நாயன்மார் செய்த உபதேசம் எல்லா மக்களுக்கும் வாழ்க்கையில் நம்பிக்கை அளித்தது. அத்துடன் பாடல் - ஆடல் - கோயில் விழா - தலயாத்திரை - அடியாரைப் பேணல் முதலியன மக்கள் உள்ளங்களை ஈர்த்தன. நாயன்மார்கள் பாடல்களும் மக்கள் மனங்களைக் கொள்ளைகொண்டன. சைவம் நன்னெறியில் வளரலாயிற்று. - - . . . . . . . . . . . . . . .