பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமய வளர்ச்சி ཧན་ཧྥུ་) : 25

கட்டித்தந்து, தங்கள் இராஜ குருக்களாகக் கொண்டனர். அவருட் சிறந்தவர் சத்ப்ாவ சம்பு என்பவர். ஹெய்ஹய (கலசூரி) அரசனான யுவமகாராசன் 1 கி.பி. 940-இல் சோணையாற்றங்கரையில் சிவன் கோயிலையும் மடத்தையும் அமைத்து, சத்பாத சம்புவிடம் ஒப்புவித்தான், மூன்று லட்சம் கிராமங்களையும் அவருக்குத் தானமாக அளித்தான். ஆசிரியர் கோளகீ மடத்தை அங்கு ஏற்படுத்தினார். 'கோளகிரி என்பதன் மரூஉவாகக் கோளகி இருக்கலாம். அம்மலை தாஹளநாட்டில் உள்ளது. அம்மடத்து ஆசிரியர் பாதுகாப்புக்காக மூன்று லட்சம் கிராமங்களின் வருவாய் பயன்பட்டது. ஈசானசிவன், ருத்ரசம்பு, மத்தமயூரநாதர், இருதய சிவன், அகோரசிவன், விசுவேசுவரசம்பு முதலிய பலர் ஆசாரியராக இருந்தனர். இவருள் விசுவேசுவரசம்பு என்பவர் மிக்க புகழ் பெற்றவர். அவர் கலசூரி அரசர்க்கும் காகதீய அரசர்க்கும் தீக்ஷா-குருவாக விளங்கினார். கலசூரி அரசர்கள் தங்களைப் பரம மாகேசுவரர்கள் என்று கூறிக்கொண்டனர். அவர்கள் கல்வெட்டுக்கள் "ஓம் நமசிவாய" என்ற தொடக்கத்தை உடையவை. தாஹள நாட்டில் ஒவ்வொரு கோயிலும் மடமும் சேர்ந்திருந்தன. மத்தமயூரப் பிரிவைச்சேர்ந்த துறவிகள் ஒவ்வொரு மடத்திலும் தலைவராக இருந்தனர்." - - .

விந்த மலைக்குத் தென்பால் இருந்த இராஷ்டிரகூடர்கள் எல்லோராக் குகைகளில் அமைத்தகயிலாசநாதர் கோயிலும் வேறு சில கோயில்களும் அவர்கள் சைவ விரோதிகள் அல்லர் என்பதை உணர்த்துவன. இராஷ்டிரகூடர்க்குப் பின் வந்த சாளுக்கியர் காலத்திலும் பம்பாய் மாகாணத்தில் சைவம் ஓரளவு வளர்ச்சியடைந்து வந்தது. -

வாரங்கல்லைத் தலைநகராய்க்கொண்டு அரசாண்ட காக தீயர்களுள் பலர் சைவர். அவருட் சிறந்தவனே முன்சொன்ன விசுவேசுவரசம்புவிடம் தீகூைடி பெற்ற கணபதி என்ற அரசன்.

இவ்விவரங்களால், சோழப்பேரரசு ஏற்பட்டகாலத்திலும் அதன் பின்னரும் பொதுவாக இந்தியாவிலும், சிறப்பாக வட இந்தியாவிலும், சைவம்நல்ல வளர்ச்சிபெற்றது என்பதை அறியலாம்.இச்சூழ்நிலையும் சோழநாட்டில் சைவம் வளரக் காரணமாயிருந்தவற்றுள் ஒன்றாகும். * சோழர் சமயநிலை: சேர்-சோழ-பாண்டியருள் சைவத்தில் மிகவும் அழுத்தமான பற்றுடையவரும் நூற்றுக்கணக்கான சிவன் கோயில்களைக் கட்டியவரும் சோழரேயர்வர். கோச்செங்கணானைப் போல 70 சிவன் கோயில்களைக்கட்டிய சேரனோ, பாண்டியனோ