பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமய வளர்ச்சி רs127 ק

விக்கிரம சோழன் (1120-1135)

குலோத்துங்கன் II (1133 - 1150) | இராசராசன்ா(146 -1173)

இராசதிராசன் (1163-1 179)

குலோத்துங்கன் 円 (1178– 12

இராசராசன் 111(1216-1256)

இராசேந்திரன் III (1246-1280)

இச் சோழ மன்னர்கள் துங்கபத்திரையாறு முதல் கன்னி முனைவரையுள்ள தென் இந்தியாவை ஆண்டவர்கள். ஆதித்தன் பேரரசனான காலத்தில் தமிழகத்தில், முன் அத்தியாயத்திற் சொன்ன, பாடல்பெற்ற கோயில்கள் இருந்தன; பாடல் பெறாத (பல்லவர் காலக்) கோயில்களும் இருந்தன." இவ்விரு திறத்துக் கோயில்களும் சோழர், காலத்தில் புதுப்பிக்கப்பெற்றன. அந்நிலையில் ஆதித்தன் முதலிய சோழ அரசர்கள் அவரவர் ஆட்சிக்காலத்தில் புதியனவாக எடுப்பித்த கோயில்கள் பல." இவர்கள் ஆட்சிக்கு அடங்கிய சிற்றரசர்கள் புதியனவாகக் கட்டிய கோயில்கள் பல." இவையனைத்தும் சோழர் காலத்திற் சிறப்புற்றுச் சமயம் வளர்க்கும் நிலையங்களாக விளங்கின. இவை அங்ங்ணம் விளங்க, அரசாங்க அலுவலர் செய்த திருப்பணிகள் பல." சோழ மாதேவியரும், சிற்றரசர் மனைவியரும், அரசாங்க அலுவலர் மனைவியரும் செய்த திருப்பணிகள் பல. துறவிகள் முதல் சாதாரண குடிமகன் ஈறாக இருந்த மக்கள் செய்த திருப்பணிகள் பல. இவை அனைத்தையும் விளக்க இஃது இடமின்மையின், முக்கியமான சிலருடைய சிறந்த சமயப்பணிகளைமட்டும் இங்குக்குறிப்பிடுவோம்.

ஆதித்த சோழன். இவன் செய்த திருப்பணிகளுட் சிறந்தது காவிரியின் இரண்டுகரைகளிலும் சிவன்கோயில்களைக் கட்டினமை." அஃதாவது, பழைய கோயில்களைப் புதுப்பித்தமையாகும். பாடல் பெற்ற கோயில்கள் அழியத்தக்க மரம், மண் முதலியவற்றால் ஆனமையால், அவை அழியாமல் இருக்கவேண்டி, அவற்றைக் கற்றளிகளாக மாற்றினான் என்பதே கருத்து. இங்ங்ணம் ஆதித்தனால் தொடங்கப்பட்ட இத் திருப்பணி, சோழ அரசர்களாலும் அரசமாதேவியராலும் பிறராலும் அவர்கள் ஆட்சி முடிய நடைபெற்று