பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமய வளர்ச்சி శ్ 129

ஆளுர், செம்பியன் மாதேவி, திருப்புறம்பியம், திருவெண்காடு, வடகுரங்காடுதுறை, தென்னேரி, திருக்களித்திட்டை, திருமங்கலம், தவத்துறை, பந்தணைநல்லூர், திருவிளக்குடி, திருவியலூர், வடதிருமுல்லைவாயில், திருநாகேச்சுவரம், கற்குடி, உடையார்குடி என்பன குறிக்கத்தக்கவை." இங்ங்ணம் செயற்கரிய திருப்பணிகள் செய்த இந்த அம்மையார் செம்பியன் மாதேவி என்று தம் பெயரால் ஓர் ஊரை நிறுவிச் சிவன் கோயிலைக் கட்டினார். அதில் இவர் கண்டராதித்தரைச் சிவலிங்கமாகப் பூசித்தலை உணர்த்தும் படிமம் - காணத்தக்கது.

இராசராசன் 1: தன்காலம்வரைதமிழகத்தில் ஏற்பட்டிராத பெரிய

அளவில் மிக்க அற்புத வேலைப்பாடுகள் கொண்ட கோயிலை அமைத்தவன் இராசராச சோழனேயாவன். இவன் ஆறு ஆண்டுகள் அரும்பாடுபட்டு அக்கோயிலைக் கட்டுவித்தான்; அதில் கடவுளருடைய - நாயன்மாருடைய திருமேனிகளை எழுந்தருளச் செய்தான்; ஒவ்வொன்றுக்கும் விலையுயர்ந்த நகைகள் அளித்தான்; பூசை - விழாவிற்காகப் பல கிராமங்களை மானியமாக விட்டான். இவனைப் பின்பற்றி அரச குடும்பத்தினரும் அரசாங்க அலுவலரும் ஏராளமான தருமங்கள் செய்தனர். அக்கோயிலில் இசை,நடனங்களை வளர்க்க 400 பதியிலார் தமிழகத்தின் பல கோயில்களிலிருந்து குடியேற்றப்பட்டனர். ஒவ்வொருத்திக்கும் ஒரு வீடும் ஒரு வேலி நிலமும் தரப்பட்டன. திருப்பதிகம் ஓத 48 பேர் பல கோவில்களிலிருந்து குடியேற்றப்பட்டன்ர். ஆரியம் பாடச் சிலர் நியமனம் பெற்றனர். இவ்வாறே கோயிற் பணிகளை நன்கு கவனித்துச் செய்யப் பல கோயில்களிலிருந்து பலர் தஞ்சையிற் குடியேற்றப் பட்டனர். இந்த விவரங்கள் எல்லாம் தஞ்சை இராஜராஜேசுவரத்தில் உள்ள கல்வெட்டுக்களால் நன்கறியலாம்."

இராசராசனும் திருமுறைகளும் : இவன் திருநாரையூர் - நம்பியாண்டார் நம்பியைக் கொண்டு தில்லையில் அடக்கம் செய்யப்பட்டிருந்த முதல் ஏழு திருமுறைகளைத் தொகுப்பித்தவன். இவன் சிவபாதசேகரன்' என்று பெயர் பெற்றான். இவன் காலமுதல் திருமுறைகள் நாடெங்கும் பரவலாயின.இவனைப்பின்பற்றி அரசரும் பிறரும் கோயில்களைக் கட்டலாயினர். -

இராசேந்திரனும் கங்கை கொண்ட சோழேச்சுரமும்: தஞ்சை இராஜர்ாஜேசுவரத்தைப் பின்பற்றிக் கட்டப்பட்டது, இராஜராஜன் மகனான இராஜேந்திரன் கட்டிய கங்கைகொண்டசோழேச்சுரமாகும்.

சைவ - 9