பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 ச. சோழர்காலச் சைவ சமயம்

13. திருப்பழனம் விஜயலாய -

- முத்தரையன் 184 of 1928 14. கீழுர் கிளியூர் மலையமான் 251 of 1902

கோப்பெருஞ்சிங்கன் திருப்பணிகள் : இச்சிற்றரசன் பல்லவ மரபில் வந்தவன். இவன் நடுநாட்டில் உள்ள சேந்தமங்கலத்தை " ஆண்டு வந்தான்; பையப்பையத் தன் படை வலியைப் பெருக்கி, மூன்றாம் இராசராசனையே சிறைப்படுத்தியவன். இவன் வீரத்திற் சிறந்திருந்தாற்போலவே சிவபக்தியிலும் சிறந்து விளங்கினான்.இவன் சிதம்பரம் தெற்குக் கோபுரத்தைக் கட்டினான்; காவிரித் தென்கரையில் உள்ள கோயில்கட்கு யாத்திரை செய்து ஆக்கூர்க் கோயிலைப் புதுப்பித்தான்;" விருத்தாசலம் கோயிலுக்கு நந்தவனம் வைக்கவும் பூசைகட்கும் பொருள் உதவினான்’ திருவெண்ணெய் நல்லூர்க் கோயில் விமானத்தைப் புதுக்கினான்; திருக்கழுக்குன்றம், பிரம்மதேசம் இவற்றில் உள்ள கோயில்கட்குத் தானங்கள் அளித்தான்; ' திருவண்ணாமலைக் கோயிலுக்கு இவனும் இவன் அரசியும் தானங்கள் அளித்தனர். இவன் மகனான மஹாராஜசிம்மன் சிதம்பரம் கிழக்குக் கோபுரத்தைக் கட்டினான்; திரிபுராந்தகம், திராகூடிாராமம், காளத்தி, காஞ்சி, திருவதிகை, மதுரை இவ்விடங்களில் உள்ள சிவன் கோயில்கட்கு நிபந்தங்கள் விடுத்தான்."

அரசியல் அலுவலாளர் செய்த திருப்பணிகள் : இவை கணக்கில் அடங்காதவை. ஆயினும் மாதிரிக்குச் சில காண்க:

1. பல்லவராயன் இரண்டாம் இராசராசன் - -

பேட்டை அமைச்சன் 434 of 1924 .

2. குடிமல்லம் யாதவராயர் - . - பிரதானி 219 of 1903 3. காளத்தி நெல்லூர்ச் . . . . . . . . . .

- சித்தியரையர்

பிரதானி 105 of 1922

காளிங்கராயன் திருப்பணிகள் : முதல் குலோத்துங்கன் சேனைத்தலைவனான நரலோக வீரன் என்ற காளிங்கராயன் செய்துள்ள திருப்பணிகள் அளவிறந்தன. இவன் மிகச் சிறந்த சிவபக்தன் சித்தலிங்க மடத்தில் சிவனுக்குக் கற்றளி எடுத்தான்." திரிபுவனை, திருப்புகலூர் இந்த இடத்துக் கோயில்களில் மண்டபங்கள் அமைத்தான் வேறு தானங்களும் செய்தான்." இவன் தில்லையிற்