பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ööööቻ6】! &ቻ[f}LL| Jaiiಕಕ ੇ 147

(முருகநாயனார்) (11) திருக்குறிப்புத் தொண்டர், (12) தண்டிப்பெருமாள் என்பன. கல்வெட்டெழுத்துக்கள் முதலாம் இராசராசன் காலத்தனவாகக் காண்கின்றன. இச்சிற்பங்கள் அக்காலத்திற் பிராகாரத்தைச்சுற்றிவந்த மக்கட்கு மிகுந்த உணர்ச்சியை ஊட்டியிருக்குமென்று நம்பலாம். மேலைக்கடம்பூர்ச்சிற்பங்கள்

மேற்சொன்ன கோயிலுக்கு ஒருகல் தொலைவில் உள்ள கடம்பூர் - கரக்கோயில் தேர்வடிவமாகச் சக்கரங்களோடு அமைக்கப்பெற்ற கோவில். இதன் கருவறையின் புறச்சுவர்களில் மிகச்சிறிய வடிவில் நாயன்மார் வரலாற்றுச் செய்திகள்ைக் குறிக்கும் சிற்பங்கள் காண்கின்றன. அவற்றுள் காரைக்காலம்மையார் தலைகீழாகநடந்து செல்லலைக் குறிப்பது ஒன்றாகும்."

பெரிய புராணச்சிற்பங்கள்

இராசராசபுரத்து-இராசராசேசுவரத்தில் இறைவன்கருவறையின்

புறச்சுவர்களில் நாயன்மார் வரலாற்று நிகழ்ச்சிகள் சிற்பங்களாகக் காண்கின்றன. ஒவ்வொன்றன் கீழும் கல்வெட்டுக் காண்கிறது." இச்சிற்பங்களும் கல்வெட்டு விளக்கங்களும் அக்காலப் பொதுமக்கள். நாயன்மார் வரலாறுகளைப் பற்றி ஒரளவேனும் அறியத் துை புரிந்திருத்தல் வேண்டும் அல்லவா? - . - இராசராசபுரத்து - இராசராசேசுவரம் இரண்டாம் இராசராசனால்

கட்டப்பட்டது என்பது முன் அத்தியாயத்திற் கூறப்பட்டது. அவன் இரண்டாம் குலோத்துங்கன் மகன்; தன் தந்தையின் அமைச்சரான சேக்கிழாரையும் அவர் இயற்றிய பெரிய புராணத்தையும் நன்கறிந்தவன். ஆதலின் அப்பெருமகன் தான் கட்டிய கோயிலிற் சுவாமியின் கருவறைப் புறச்சுவர்கள் மூன்றிலும் பெரிய புராணத்திற் குறிக்கப்பெற்ற நாயன்மார் வரலாற்று நிகழ்ச்சிகளைச் சிற்பங்களாகச் செய்வித்துக் கீழே விளக்கமும் வெட்டுவித்தான் போலும்

தஞ்சைப் பெரிய கோயில் ஒவியங்கள்

தஞ்சைப் பெரிய கோயிலின் மூல அறையின் புறச் சுவர்களில் சோழர் கால ஓவியங்கள் காண்கின்றன. அவை முற்றும் வெளிப்படுத்தப்படவில்லை. வெளிப்பட்டவை சிலவே. அவற்றுள். குறிக்கத்தக்கவை பின்வருவன : (1) சிவபிரான் மான் தோல்மீது யோகத்தில் இருக்கிறார். அவரைச் சுற்றிலும் சிவ கணங்கள்