பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவசமய வளர்ச்சி శా 149

சிவனைக் குறிக்கும் பல மூர்த்தங்கள் தஞ்சை - இராசராசேசுவரத்தில் வைக்கப்பட்டன. இவையன்றிக் கணபதி, சுப்பிரமணியன், மகாவிஷ்ணு, சூரியன், திருமேனிகளும் வைக்கப்பட்டன." அம்மன்களுள் காலப்பிட்ாரி, துர்க்கா - பரமேசுவரி, எமளத்து - துர்க்கையார், ஓங்கார சுந்தரி என்பவர் பூசிக்கப்பட்டனர். சப்தமாதர், சரசுவதி, மகாசாஸ்தர் முதலியவர் திருமேனிகளும் கோயில்களில் பூசிக்கப்பட்டன."

கோயில் விழாக்கள்

சோழர்காலக் கோயில்கள் பலவற்றில் சித்திரை, வைகாசி, ஆணி, ஆவணி, ஐப்பசி,கார்த்திகை, மார்கழி,தை மாசி,பங்குனி மாதங்களில் அந்தந்த மாதத்திற்குரிய விழாக்கள் சிறப்பாக நடைபெற்றன என்பது கல்வெட்டுக்களால் தெரிகிறது.' விழாக்களில் இறைவன் தன் பரிவாரங்களுடன் ஊர்வலமாக வருதலை முன் சொல்லப்பட்ட தில்லையுலா நன்கு சித்திரித்துள்ளது. அடியார்களின் படிமங்களும் ஊர்வலத்திற்கொண்டுசெல்லப்பட்டன. உலாவின்போது திருமுறை ஒதப்பட்டது. வேதமும் ஒதப்பட்டது. கோயிலைச் சேர்ந்த நடனமாதர் நடனமாடினர்.' மாசிமகம் போன்ற குறிப்பிட்ட விழாக் காலங்களில் பக்கத்தில் உள்ள ஆற்றுக்கோ, கடலுக்கோ இறைவனைக் கொண்டு சென்று நீராட்டப் புதிய சாலைகளை அமைத்தனர் என்பதும் தெரிகிறது." . -

நாயன்மார்க்குப் பூசையும் விழாக்களும்

பல்லவர் காலத்தில் நாயன்மார்கள் வாழ்ந்து மறைந்த இடங்களில் இருந்த கோயில்களிலேனும் அவர்களுடைய உருவச் சிலைகளும் செப்புப்படிமங்களும் எழுந்தருளப் பெற்றிருத்தல் வேண்டும்; சிறப்பாகச் சுந்தரர் திருத்தொண்டத்தொகை பாட உதவியாகத் தேவாசிரியமண்டபத்தில் காலஞ்சென்றநாயன்மார்களின் ப்டிமங்கள் இருந்திருத்தல் வேண்டும் என்பன முன் அத்தியாயத்தில் - குறிக்கப்பட்டன. இங்ங்ணம் நாயன்மார்க்கு உருவச்சிலைகள் அமைப்பதும், தனிச்சிறுகோயில்கள்அமைப்பதும் செப்புப் படிமங்கள் எடுப்பதும் அவற்றுக்குப் பூசை - விழாக்கள் செய்வதும் சோழர் காலத்தில் பெருகலாயின என்பது கல்வெட்டுக்களால் அறியப்படுகிறது. இடச்சுருக்கம் கருதிச் சில கோயிற் பெயர்களை மட்டும் இங்குக்குறித்தல் சாலும்: -