பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 ச. கோயில்கள் மடங்கள்- சமயநிகழ்ச்சிகள்

சமயப்பற்றை இவை நன்றாக ஊட்டியிருத்தல் வேண்டும். இந் நடன மங்கையர் சிறந்த அழகிகள்; கண்ணைக் கவரத்தக்க ஆடையணிகளையும் கூந்தல் ஒப்பனையையும் பெற்றவர்கள். இவர்களைப் பற்றி ஓரளவு அறியத் தஞ்சைப் பெரியகோயில் ஒவியங்கள் துணை புரியலாம். சோழர் காலத்தில் இருந்த அரிய நடனவகைகள் எல்லாம் தில்லைக் கோயிற் கிழக்குக் கோபுரத்திற் சிறக்கக் காணலாம்." அவை அக்கால நடனக் கலையின் உயர்வை நன்கு உணர்த்தவல்லவை.

நாடகம்

நாடகத்தையே ஒரு பகுதியாகக் கொண்டு தமிழ் மொழி வழங்கும் நாட்டில் நாடகங்கள் நடந்தன எனக் கூறல் மிகை. சோழர் காலத்தில் ஆண்டு தோறும் வைகாசி விழாவில் தஞ்சைப் பெரிய கோயிலில் இராசராசேசுர நாடகம் நடித்துக் காட்டப்பட்டது. நடித்த விசயராசேந்திர - ஆசாரியனுக்கு ஆண்டுதோறும் 120 கலம் நெல் தரப்பட்டது. இராசராசன் கட்டிய பெரிய கோயில் பற்றிய நாடகமாக அஃது இருக்கலாம்.” விக்கிரமாதித்த ஆசாரியன் என்ற இராசராச நாடகப் பெரியன் என்பவன் பந்தணைநல்லூரில் நட்டுவப்பங்கு, மெய்மட்டிப்பங்கு (நாடகக் காணி?) இவற்றைப் பெற்றவனாய் இருந்தான் என்று அவ்வூர்க் கல்வெட்டுக் கூறுவதால், இராசராச நாடகம் (முதலாம் இராசராசனைப் பற்றியது) என ஒன்று இருந்தது; அந்நாடகம் நடிக்கப்பட்டது என்பன அறியலாம்.இந்நூல் அவ்வரசனது வரலாற்றை நாடக முறையில் எழுதப் பெற்றதாகும்.* முதற் குலோத்துங்கன் காலத்தில் பூம்புலியூர் நாடகம் என்ற ஒன்று செய்யப்பட்டது. செய்தவனுக்குப் பரிசு தரப்பட்டது. அது திருப்பாதிரிப்புலியூரைப் பற்றியது. அம்மன் கன்னிகையாக இருந்து சிவனை வழிபட்டமை, அப்பர் சமணராய் இருந்தமை, பின் சைவரானமை, சமணருடைய கொடுமைகட்கு ஆளானமை, பிறகு கடலில் மிதந்துகரைசேர்ந்து, அவ்வூர்க்கோயிலில் பதிகம் பாடினமை, மகேந்திரன் அங்கிருந்த சமணப் பள்ளியை இடித்துக் குணபரஈசுவரம் கட்டினமை போன்றவற்றைக் காட்சிகளாகக் கொண்ட நூலாக இருக்கலாம். அது நடிக்கப் பெற்றமைக்குச் சான்று இல்லையாயினும், சமயப் பற்று மிக்கிருந்த அக்காலத்தில் அது நடிக்கப்பட்டதெனக் கருதுதல் தவறாகாது. இங்ங்னம் சைவ அரசர்களையும் நாயன்மார்களையும் பற்றிய நாடகங்கள் சிலவேனும் அக்காலத்தில் நடிக்கப்பட்டன எனக் கொள்ளலாம். - -