பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமய வளர்ச்சி -ఖ 155

தேவரடியார்

கேர்யில்களில் இருந்து தொண்டாற்றிய மாதருள் தேவரடியார் ஒருவகையினர். இவர்கள் கோயிலில் திருவலகிடல், திருமெழுகிடல், படையல் அரிசியைத் தூய்மைப் படுத்தல், திருப்பதியம் பாடல் முதலிய பணிகளைச் செய்து வந்தனர். மேலும் இவர்கள் திருநீற்றுத் தட்டும், புஷ்பத்தளிகை என்பவற்றையும் விழாக் காலங்களில் எடுத்துச்செல்வர்; அம்மனை அலங்காரப்படுத்தி மண்டபத்தில் வைக்கும் பொழுது கவரி வீசுவர்." சுவாமிக்கு அல்லது அம்மனுக்குக் கவரி வீச இருந்த பெண்கள் "கவரிப் பிணா' எனப்பட்டனர். முதற் குலோத்துங்கனது 49-ஆம் ஆட்சியாண்டில் பாணபுரத்தில் இருந்த அச்சப்பிடாரன் கணபதி நம்பி என்ற படைத் தலைவன் திருவல்லம் சிவபெருமானுக்குத் தன் குடும்பப் பெண்கள் சிலரைத் தேவர்டியாராக விட்டான். அவர்கள் சூலப்பொறி பொறிக்கப்பெற்றுக் கோயில் பணியிற் சேர்க்கப்பட்டனர். தேவரடியாரது சிறப்பு இதிலிருந்து நன்கு உணரப்படுமன்றோ?' தேவரடியாருள் சிலர் நடனமாடவும் அறிந்திருந்தனர்.”

தளியிலார்

இவர்களை இராசராசன் தளிச்சேரிப் பெண்டுகள் என்று குறிப்பிட்டான். இவர்கள் கோயிலுக்கு வெளியே குடும்பமாக வாழ்ந்தவர்; இசை - நடனங்களில் வல்லவர். இவர்கள் சைவ - வைணவக் கோயில்கள் என்ற வேறுபாடின்றி வேலை செய்தவர்கள்.” இவருள் சிவன் கோயிற்பணி செய்தவர் ரிஷபத்தளியிலார்' என்றும் (இடபப்பொறி பொறித்தவர்கள் அல்லது சிவன் கோயிற் பெண்டுகள் எனப் பொருள் படலாம்), வைணவக் கோயில்களில் இருந்தவர் "பூரீ வைஷ்ணவ மாணிக்கம்" எனவும் பெயர் பெற்றனர் என்று கருதக் கல்வெட்டுக்கள் இடந்தருகின்றன. இவர்கள் இராசராசன் காலத்தில் ஆடல் - பாடல்களில் முனைந்திருந்தனர்; பின்னர்த் திருப்பதிகங்கள் பாடவும் தொடங்கினர்; சோழர் ஆட்சியின் இறுதியில் தேவரடியாரைப் போலக் கவரி வீசல் முதலிய பணிகளையும் மேற்கொண்டனர்."

கோயில்களில் திருமுறைகள்

இராசராசன் திருமுறைகளைச் செம்மைப்படுத்தற்கு முன்பே திருவல்லம், எறும்பியூர், பழுர், ஆவடுதுறை, தவத்துறை ஆத்தூர், குமாரவயலூர், அந்துவநல்லூர் முதலிய சில ஊர்க் கோயில்களில் திருப்பதிகங்கள் ஒதப்பட்டன." இராசராசன் கட்டிய தஞ்சைப் பெரிய