பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமய வளர்ச்சி མདོ་དྷུ་5 1.6SS9

பார்க்கப் பிராமணர் அறுவர், சோழ நாட்டிலிருந்து சென்ற வீரபத்திரர் என்று பெயர் பெற்ற கிராமக் காவலர் பதின்மர், வீர முஷ்டிகள் என்று பெயர் பெற்ற கிராமப் பணிமிக்கள் இருபதின்மர். இவர்கள் இருபதின்மரும் கொல்லத் தொழில், வீடு கட்டும் தொழில், மூங்கில் வேலை, மட்பாண்டத் தொழில், தச்சுத் தொழில், நாவிதத் தொழில் முதலிய தொழில்களை அறிந்தவர்கள். அறுபது திராவிட பிராமணக் குடும்பங்கள் அக்கிராமத்தில் குடியேறினர். காளாமுகப் பாசுபதரே அங்கிருந்த மடத்தில் மாணர்வகளாகச் சேர்க்கப்பட்டனர்."

மடத்தில் பொதுக்கல்வியும் சமயக்கல்வியும் கற்பிக்க ஆசிரியர்கள், இசை - நடனக்கலைகளை வளர்க்கப் பாடகிகள், நடனமாதர் - வாத்தியக்காரர், மருத்துவர் பலவகைப் பணிபுரிபவர் எனப்பலர் இருந்தனர் என்பது மேற் சொல்லப்பட்ட விவரங் களிலிருந்து அறியலாம். -

வாரணாசிக் கொல்லாமடம் : இவர்கள் மேற்சொன்ன கோளகி மடத்துப் படித்த லகூடிாத்யாயராவளர் என்பவர் சந்தானத்தைச் சேர்ந்தவர்கள். இவருள் ஞானசிவ - ராவளர் என்பவர்க்கு மாணவரான ஓங்கார சிவ - ராவளர் என்பவர் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் திருப்பாசூரில் இருந்தார்." பாண்டிநாட்டுப் பிரான்மலையில் மேற்சொன்ன சந்தானத்தைச் சேர்ந்த தேசிகேந்திரர் என்பவர் மாணவரான ஈசானசிவ-ராவளர் ஒருமடத்தைக்கட்டிக்குடியேறினார். மாறவர்மன் சுந்தரபாண்டியன் அம்மடத்திற்கு நிலங்களை அளித்தான்." ஓய்சள் அரசன்ான வீர இராமநாதன்திருவானைக்காவில் ஒரு மடம் அமைத்து, லக்ஷாத்யாயராவளர் என்பவர்தம் மாணவரும் சைவசித்தாந்தப் பேராசிரியருமான தத்புருஷசிவாசாரியர் என்பவரைத் தலைவராக அமர்த்தினான். (21 of 1891) இதனால் இச்சந்தான ஆசாரிகள் தொடர்ந்து இருந்து வந்தமை தெளிவாகும்.” . வாரணாசி - பிக்ஷாமடம் : இவர்களும் கோளகி மடத்தைச் சேர்ந்தவர்கள் என்று கருத இடமுண்டு. இம்மடத்தைச் சேர்ந்த - ராவளர் ஒருவர் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் பந்தனை . நல்லூரில் இருந்ததாகக் கல்வெட்டுக் குறிக்கிறது." சுமார் கி.பி. 1281-இல் திருப்பத்தூரில் பிக்ஷாமடத்துச் சைவாசாரியரான ராஜேந்திரத்து - முதலியார் சைவப் பிரகாசர் என்பவர் ஒரு மடத்தை நிறுவித் தலைவரானார். அது சைவப் பிரகாசன் - மடம் எனப் பெயர்பெற்றது." கிருஷ்ணதேவராயர் காலத்தில் தேவிகாபுரத்தில் (வட ஆர்க்காடு மாவட்டம்) பிக்ஷா - மடம் ஒன்று இருந்தது என்றும், அதன் தலைவர் ஈசான சிவாசரியார் என்றும் கல்வெட்டுக்