பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17O ge மடங்களும் குகைகளும்

கூறலாலும், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மணப்படை வீடு என்னும் இடத்திலும் இம்மடத்துச் சைவாசாரியர்கள் இருந்தனர் ஆதலாலும், இம்மடத்து ஆசாரியர்கள் நீண்டகாலம் தமிழகத்தின் சில பகுதிகளிலேனும் தங்கிச் சமயத் தொண்டு செய்துவந்தனர் என்று கூறலாம்." .

சோழ மன்னர்தம் இராஜ குருக்கள் : சோழ அரசர்கள் அழுத்தமான சிவ பக்தர்கள். ஆதலால் திருமந்திரத்திற் கூறியபடி தீட்சை பெற்ற சிவனடியாராக இருந்திருத்தல் வேண்டும் என்று நினைத்தல் பொருத்தமாகும். அங்ங்னமாயின், அவர்கட்கு ஆசாரிய ஸ்தானத்தில் இராஜ குருக்கள் இருந்திருத்தல் வேண்டும். பரமார அரசனான அர்ச்சுனவர்மனுக்கு கெளடதேசத்து மதனன் என்பவர் ராஜகுருவாக அமைந்தாற் போல’ சிவபாத சேகரனான் இராஜராஜனுக்கு ஈசான சிவபண்டிதர் இராஜ- குருவாக இருந்தார்." அவன் மகனான இராஜேந்திரனுக்கு சர்வசிவ - பண்டிதர் இராஜ - குருவாக இருந்தார்."முதல் இராஜாதிராஜனால் 'குருதேவர் என்று மதிக்கப்பெற்ற ஒருவர்.அவன்கல்வெட்டுக்களில் காண்கிறார்."முதற் குலோத்துங்கன்தன் குருதேவர் சொன்னபடி 108 சதுர்வேதிகட்கு ஒரு கிராமத்தைப் பிரமேதேயமாக விட்டான்ஃவிக்கிரம சோழன் காலத்தில் இருந்த சுவாமிதேவர் நீகண்டசிவன் அவனது குருவாக இருக்கலாம். பூரீ கண்ட சம்புவின் மகனாரான சோமேசுவரர் என்ற ஈசுவர சிவன் என்பவர் மூன்றாம் குலோத்துங்கனுடைய இராஜகுருவாவர். இவர் சிவதரிசனத்தில் தேர்ச்சி பெற்றவர்; 18 வித்தைகளில் வல்லவர்; உபநிடதங்களில் உள்ள சிவநெறியை விளக்கியவர்; சித்தாந்த ரத்நாகரம் என்ற நூலின் ஆசிரியர். இவரே சுவாமி - தேவர் எனப்பட்டவர். அரசன் திருக்கடவூர்க் கோயிலுக்கு இருவரை அர்ச்சகராக நியமித்த கட்டளையை இச் சாமி தேவர் மாற்றி வேறு இருவர்ை நியமித்தனர், அதை அரசன் ஆமோதித்தான்' என்பதிலிருந்து, இந்த இராஜ குருக்கள் சோழ அரசர்களிடம் பெற்றிருந்த செல்வாக்கை அறியலாம். . - , .

இராஜ ராஜன் குருவான ஈசானசிவன் சித்தாந்தசாரம் என்ற நூலை எழுதியவர். திரிலோசன் சிவாசாரியர் என்பவர் சித்தாந்த சாராவளி எழுதியவர்: முதல் இராஜேந்திரன்க்ங்கைக்கரையிலிருந்து சைவாசாரியர்களைத் தமிழகத்திற் குடியேற்றினான் என்று சித்தாந்த சாராவளியின் முகப்பில் கூறப்பட்டுள்ளது. சம்பு,சிவன் என்ற முடிவுகளைக்கொண்டபெயர்கள்கோளகிமடத்துச்சிவாச்சாரியரிடமே 10 ஆம் நூற்றாண்டு முதல் காணப்படலாலும், சோழர் காலத்தில் கல