பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமய வளர்ச்சி ఇష్ట్రా 171

சூரியர், காகதீயர், மாளுவர், தெலுங்குச் சோழர் இவர்கட்குக் கோளகி மடத்தாரே தீக்ஷா - குருக்களாக இருந்தமையாலும், சோழருடைய இராஜ-குருக்கள் கோளகி வம்சத்துச் சைவாசாரியர்கள் என்று கோடல் தவறாகாது. தாராசுரத்து - இராஜராஜேசுவரத்தில் 108 சைவாசாரியர்களுடைய சிறு உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் கீழ்வரும் சில பெயர்கள் மட்டும் செதுக்கப்பட்டுள்ளன:

24, நாங்கூருடையான் மாதேவரான தத்புருஷசிவா. 25. நாங். செய்ய பாதத்தரான அகோரசிவா. 26. நல்லாவூர்ப்பொன்னம்பலத்தாரான ஈசான சிவா. 33. ஆயம்பூருடையான சதாசிவா. 34. காவரமங்கமுடையாரான சந்திரசேகரரான ஆனந்தசிவா. 35. ஐயூருடையார்- திருமறைக்காடுடை யாரான ஈசானசிவா, 39. வேற்குடையார். தத்புருஷசிவர். - 40. கொற்றங்குடையாரான-சிவகருணாலயரான-ஈசானசிவா. 54. மண்ணக்குடையார் - மால்தேவரான - வைராக்கிய சிவா.

55. வடுகக்குடையார் -ஆநந்தக் கூத்தரான-ஈசானசிவா. 70. ....., சத்ாசிவா. - -

100. ... பொன்னம்பலக் கூத்தரர்னதர்மசிவா.

107. பெருவேளுர்க் கிழவர். 的 8 微姆零》始曾 $ தர்மசிவா.

108. மழவச்சமுடையார் - திருச்செம்பொன்பள்ளி உடையார்."

சோழப் பேரரசன் கட்டிய கோயிலில் இச் சைவாசாரியர்

உருவங்கள் சிற்பங்களாக இருத்தலால், இவர்கள் சோழர் காலத்தில் சிறப்புப் பெற்ற சிவாசாரியர்களாக இருந்திருத்தல் வேண்டும் என்று கொள்ளலாம். இவற்றில் சில முன் சொன்ன இராஜ - குருக்கள் சிலைகளாகவும் இருக்கலாம். இவர்கள் மடங்களில் வாழ்ந்தார்களோ, தனிப்பட இருந்தார்களோ, உண்மை தெரியவில்லை. இப்பெருமக்களாலும் முன்சொன்ன இராஜ - குருக்களாலும் சைவசமயம் தமிழ்நாட்டில் நன்கு வளர்ச்சி பெற்ற தென்னல் மிகையாகாது. JAAA S S S S S S S S S S S SAAAAS ... . . . . . . . . .