பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 ச மடங்களும் குகைகளும்

இருந்தவர் திருத்துறையூர் மட்த்தில் இருந்த அருள் நந்தி சிவாசாரியார் என்பவர். அவர் தமது முதியவயதில் மெய்கண்டார்க்கு முதல் மாணவரானவர்.இவ்விவரங்களை நோக்க, மெய்கண்டார்க்கு முன்பே நாட்டில் சைவ சித்தாந்த மடங்கள் திருத்துறையூரிலும் திருவிசலூரிலும் இருந்திருத்தல் வேண்டும், என்பது தெரிகிறது. இரண்டாம் குலோத்துங்கன்காலத்தில் (கி.பி.1115) திருத்துறையூரில் சிவானந்த மகாமுனி என்பவர் மிக்க செல்வாக்குடையவராக இருந்தார்.” முதற்குலோத்துங்கன் காலத்தில் கன்னிவன புராணம் பாடிய பரசமய கோளரி மகாமுனிவரைப் போலச் சிவானந்த மகாமுனிவரும் சைவப் பெரியார் என்பதில் ஐயமில்லையாதலாலும், இவர் வாழ்ந்த திருத்துறையூரிலேயே அருள்நந்தி சிவாசாரியர் பிற்பட இருந்தவராதலாலும், பல சீடர்களுக்கு ஆசாரியராக இருந்தமையாலும், மெய்கண்டார் காலத்தில் மிக்க முதியவராக இருந்தமையாலும், அவர் முன் சொன்ன சிவானந்த மாமுனிவருக்கு மாணவராக இருக்கலாம் என்று கருத இடந்தருகிறது.

மெய்கண்டாருக்கு 49 மாணவர்கள். அவருள் அருள் நந்தி சிவாசாரியார் முதல்வர். அவர் சிவஞான சித்தியார், இருபா இருபஃது என்ற சைவ சித்தாந்த சாத்திரங்களைச் செய்தவர். மற்றொரு மாணவரான மனவாசகம் கடந்தார் என்பவர் உண்மை விளக்கம் என்ற சித்தாந்த நூலைச் செய்தார். அருள் நந்தி சிவாசாரியர் மாணவருட்

சிறந்தவர் மறைஞான சம்பந்தர் என்பவர். இவர் தில்லையில் இருந்து

சமயத் தொண்டு செய்தவர். இவர் மாணவரே சிவப்பிரகாசம் முதலிய சைவ சித்தாந்த நூல்கள் எட்டினைச் செய்த உமாபதி சிவாசாரியார் என்பவர். அவர் கொற்றவன் குடியில் மடத்தைத் தாபித்துப் பலர்க்குச் சித்தாந்த பாடங்களைக் கற்பித்து வந்தார்.".மெய்கண்டார் கால முதல் அவர் சீடர்கள் பல இடங்களிற் பரவி மடங்களை ஏற்படுத்திக்கொண்டு சைவ சமயத்தை வளர்க்க முற்பட்டனர் என்பதையும், மெய்கண்டார் வாழ்ந்த 13-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்துதான் மேலே சொல்லப்பட்ட முதலியார் மடங்கள் பல இடங்களில் திடீரெனத் தோன்றலாயின என்பதையும், மெய்கண்டார் பிறந்த பொழுது பிரம்ம சூத்திரத்திற்குச் செய்யப்பட்ட பேருரைகளான நீலகண்ட பாஷ்யம், சங்கர பாஷ்யம்,இராமாநுஜபாஷ்யம், மாத்வபாஷ்யம் என்பன நாட்டிற் பரவிச் சமயக் கொள்கைகளைப் பற்றிப் பெருங் குழப்பத்தை விளைத்தன; அக்குழப்ப நிலையைச் செம்மைப்படுத்தி உண்மைச் சைவ சித்தாந்தத்தை நிலைநாட்டவே மெய்கண்டார் தோன்றினார்’ என்பதையும் நன்கு சிந்தித்தால், முன் சொல்லப்பட்ட பலவகைச் சைவமடங்கள்மெய்கண்டார் மாணவர்களால் ஏற்படுத்தப்பட்டனவாக இருக்கலாமோ என்று கருத இடந்தருகிறது.' கல்வெட்டாராய்ச்சி