பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமய வளர்ச்சி ཕགངྒཱs 175

யாளர்கள் கீழ்வருமாறு கூறியுள்ளது. நமது ஊகத்தை உறுதிப்படுத்து வது காணக. * "இவ்வாறு சைவசமயம் படிப்படியாகச் சோழமன்னர் ஆதரவில் வளர்ச்சி பெற்றிருந்தது. கி.பி. 13-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல மடங்கள் சைவத்துறவிகளின் தலைமையில் தோன்றின. அவை பெரும்பாலான தமிழ் மக்களிடம் செல்வாக்கைப் பெற்றன. சங்கரர் சண்டமாருதப் பிரசங்கம் செய்த நாடு இது. அவர் பக்தி வழிபாட்டை வற்புறுத்தினார்; அதே சமயத்தில் சாத்திரங்களில் கூறப்பட்டுள்ள சாதி ஆசாரங்களை வற்புறுத்தவில்லை; அன்பே சிவம் என்று வற்புறுத்தினார். இதனால் பெரும்பாலான மக்கள் சைவசமயத்தைத் தழுவினர். இச்சைவக் கொள்கை வைதிகப் பிராமணரிடம் செல்வாக்குப் பெறவில்லை. இங்ங்ணம் சைவம் பொதுமக்களிடையில் செல்வாக்குப் பெற்றதால், நாட்டில் பல மடங்கள் தோன்றின. அம்மடங்கள் சம்பந்தர், திருநாவுக்கரசர் முதலிய சைவ சமய

குரவர்களின் பெயர்களைத் தாங்கின."

மெய்கண்டாருடைய முதல் மாணவர் பரம்பரையில் வந்த நமசிவாய தேசிகரால் ஏற்படுத்தப்பட்டது, திருவாவடுதுறை ஆதீனம். அதே பரம்பரையில் வந்த ஞானசம்பந்த தேசிகரால் உண்டானது தருமபுரமடம்.” இவை இரண்டும் பல கோயில்களின் ஆட்சியைக் கவனிப்பதுடன் பொதுக்கல்வி - சமயக்கல்வி நிலையங்கள்ை நடத்தி வருதலைக்காண்கிறோம். இங்ங்னமே பண்டைத் தமிழர் மடங்களும் இருந்தன என்று நாம் கருதலாம். மடத்தில் வேலை செய்யச் சூலமுத்திரையிடப்பெற்ற ஆண்களும் பெண்களும் இருந்தனர்" என்பதையும், மடத்திற்கு 36 பேர் ஒரே சமயத்தில் மட அடிமைகளாக விற்கப்பட்டனர்' என்பதையும் நோக்க, மடத்தில் பலவகை வேலைகளைக் கவனிக்க இத்தனை மக்களும் தேவைப்பட்டனர் என்பதை அறியலாம்; அதனால் மடத்தில் சமயத் தொடர்பான பல செயல்கள் கவனிக்கப்பட்டுவந்தன என்பது தெரிகிறது.

ஏறத்தாழக் கி.பி. பத்தாம் நூற்றாண்டிலிருந்து கோயிலை அடுத்து மடம் ஏற்பட்டு வந்தது. இம்மடங்கள் சமுதாயத்தில் மிக்க செல்வாக்கைப் பெற்றன; பெரும்பாலான இடங்களில் கோயில் ஆட்சியையும் கவனித்தன. யாத்திரிகர்மடங்களில் தங்கியிருக்கவசதி

இம்மடங்கள் பயன்பட்டன. பல சாத்திரங்களைக் கற்பிக்க மடங்களில் ஆசிரியர்கள் இருந்தனர். நோயாளிகளுக்கு மடத்திலிருந்து மருந்தும் கொடுக்கப்பட்டது. சேர நாட்டு மடம் ஒன்று விலங்குகளுக்கு மருத்துவமும் அளித்தது." § - -- -