பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 மடங்களும் குகைகளும்

குகைகள் : மூன்றாம் குலோத்துங்கன் காலமுதல் பல கோவில்களில் குகைகள் என்னும் ஒரு வகை மடங்கள் இருந்தன என்பது தெரிகிறது. அவற்றுள்கீழ்வருவன குறிக்கத் தக்கவை.

1. திருத்துறைப் குகை 471 of 1912

பூண்டி - f 2. குறுக்கை திருஞானசம்பந்தன் - -

- குகை - 233 of 1917 3. சீகாழி திருமுறைத்தேவாரச் -

செல்வன் - குகை 10 of 1918

4. திருவிடைவாய் திருத்தொண்டத்

தொகையான்-குகை 10 of1918

5. திருப்புகலூர் குகை 87 of 1927

6. திருமாகாளம் பொலி - ". . . -

- சாத்தழகியான்-குகை 24 of1917

7. திருமணஞ்சேரி ஆலாலசுந்தரன் - குகை 28 of 1914

8. முணியூர் திருஞானசம்பந்தன் - .

- குகை 156 of 1911 9. சிதம்பரம் குகை 48 of 1935-36 10. சதுர்வேதிமங்கலம் திருஞானசம்பந்தன்

குகை - 311 of 1928 (இராமநாதபுர மாவட்டம்) -

இக்குகைகள் பெரும்பாலும் சிவன் கோயில்களுக்குள் கட்டப்பட்டவை, பாதுகாப்பு மிக்கவை; திருமுறைகளில் வல்ல சைவத்துறவிகளைத் தலைவர்களாகப் பெற்றவை. திருச் சிற்றம்பலமுடைய முதலியார், தவசி-தம்பிரான்தோழர், புகலிவேந்தர், இருதயதேவர் என்ற பெயர்களைக் கொண்ட துறவிகள் சில குகைகட்குத் தலைவர்களாக இருந்தார்கள். சீகாழியில் இருந்த குகையில் முதலியார் - திருவையாறுடையார் என்பவர் இருந்தார். அவருடைய சீடர்கள் திருமுறைகளைப் பண்ணுடன் பாடுவதில் சமர்த்தர். அவர்கள் திருவிடைவாய்க் கோயிற் குகையில் திருமுறை களை ஒதினார்கள். சில குகைகளில் தவசிகள், ஆண்டார்கள், யாத்ரிகர் என்பவர் உண்பிக்கப்பட்டனர். மூன்றாம் குலோத்துங்கன் 22-ஆம் ஆட்சியாண்டில் (சுமார் கி.பி. 1200-இல்) குகையிடி கலகம் தோன்றியது. அஃது எதற்காக, யாரால், ஏற்பட்டது:" அக்கலகம்