பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 ச மடங்களும் குகைகளும்

'முத்திறத்தடியார் அமுது செய்தருளத் தானம்' என்ற தொடர் காண்கிறது." 8. மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும்

அடியேன்-திருத்தொண்டத் தொகை. - உலகாண்ட மூர்த்தி - இப்பெயர் கடம்பூர் இளங்கோயிலில் மூர்த்தி நாயனார் சிலையிருந்த புரையினடியில் வெட்டப்பட்டது. -

9. கோப்பெருஞ்சிங்கன் காலத்தில் (1216 - 1256) திருவெண்ணெய் நல்லூர்க் கோயில் 'பிச்சனென்று பாடச் சொன்னான்' என்ற பெயர் கொண்ட வெள்ளி ஊதுகொம்புகள் இருந்தன.இத்தொடர் சுந்தரரைத்தடுத்தாட்கொண்டவரலாற்றுள் ஒரு நிகழ்ச்சி. இது பெரியபுராணத்துள் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. - 10.திருக்கடவூர்க் கோயிலுக்குச்சோழர்காலமக்கள் அளித்துள்ள திருநந்தாவிளக்குகள் மிகப்பல. இவ்வளவு விளக்குகள் அளிக்கப்பெற்றகோவிலைக்காண்டல் அருமை. ... . . .

விரும்பிநல் விளக்குத் தூபம்

விதியினால் இடவல் லார்க்குக் கரும்பினிற் கட்டி போல்வார் - கடவூர்வீரட்ட னாரே.

என்னும் அப்பரது திருவாக்கை எண்ணியே அவை அளிக்கப் பெற்றனவாதல் வேண்டும்." இன்றும் அக் கோயிலில் ஆண்டுக் கொருமுறை லக்ஷம் விளக்குகள் ஏற்றும் வழக்கம் இருந்து வருவது குறிக்கத்தக்கது. - - - - -

மூன்றாம் இராசராசன்ஆட்சிக்காலத்தில்ஹொய்சள-வீரநரசிம்ம தேவன் படையெடுத்துவந்து கோயில்களை அழித்துச் சிலைகளை எடுத்துச்சென்றான். அதனால் திருவரத்துறைக்கோயிலில் தேவாரமழகியான் என்பவன் ஆட்கொண்ட நாயகர், அம்மன், திருவாதவூர்ப் பெருமான் சிலைகளை அமைத்தான்." திருவிளக்குடியில் இருந்த சிலைகள் திருச்சத்தி முற்றம் கோயிலில் வைக்கப்பட்டிருந்தன. படையெடுப்புக்குப்பின் அவை கொண்டு வரப்பட்டு முன்போலப் பூசை முதலியன நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டது." அப்படையெடுப்பால் கோடிக் குழகர் கோயில் பழுதுற்றது. படையெடுப்புக்குப்பின்னர் அக்கோயில் புதுப்பிக் கப்பட்டது." இவ்வுண்மைகளிலிருந்து அக்காலத் தமிழ் மக்களின் சமயப்பற்ற்ை நன்கறியலாம். - . . . -