பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமய வளர்ச்சி ఇష్ట్రా క్ష87

திருச்சாட்டியக்குடி, தஞ்சைராசராசேசுவரம், திருவிடைமருதூர் ஆகிய பத்துத்தலங்களில் பத்துத் திருவிசைப்பாக்கள் பாடியுள்ளார். (4) பூந்துருந்திநம்பி காடநம்பி என்பவர் திருப்பூந்துருத்தியில் பிறந்தவர். இவர் திருவாரூர், தில்லை என்னும் இருபதிகள் மீது இரண்டு திருவிசைப்பாக்கள் பாடியுள்ளார். இவர் கண்ம்புல்லர், கண்ணப்பர், ஆமூர் நாவுக்கரசர், சம்பந்தர், சேரமான் பெருமான், சுந்தரர் ஆகிய நாயன்மார்களைத்தம் பாக்களில் பாராட்டியுள்ளார். (5)கண்டராதித்தர் முதற்பராந்தக சோழனின் மகனார். இவர் மனைவியாரே சைவத்திருப்பணிகளை மிகப்பலவாகச் செய்த செம்பியன் மாதேவியார் கணடராதித்தர் தில்லையைப்பற்றியே ஒரு திருவிசைப்பாப் பாடியுள்ளார். இவர், தம் தந்தை சிற்றம்பலத்தைப் பொன் வேய்ந்தான் என்பதைக் குறித்துள்ளார். (6) வேணாட்டடிகள் என்பவர் தென்திருவாங்கூர்ப் பகுதியை (வேள்நாட்டை)ச் சேர்ந்தவர். இவரும் தில்லையைப் பற்றியே ஒரு திருவிசைப்பாப் பாடியுள்ளார். (7) திருவாலி அமுதனார் சீகாழியை அடுத்துள்ள திருவாலி என்னும் ஊரைச் சேர்ந்தவர்; நான்கு திருவிசைப்பாக்கள் தில்லையைப்பற்றியே பாடியுள்ளார்.தென்னன்தமிழும் இசையும்கலந்தசிற்றம்பலம்" என்று குறித்தலிலிருந்து, இவருடைய தமிழ்ச்சுவையும் இசை அறிவும் அறியற்பாலன. (3) புருஷோத்தம நம்பி என்பவர் தில்லை ஒன்றைப்பற்றியே இரண்டு திருவிசைப்பாக்கள் பாடியுள்ளார். (9) சேதிராயர் என்னும் பட்டம் திருக்கோவலூர் மன்னர்களே பூண்டிருந்தனர். ஆதலின் இவர், பல்லவர் காலத்து மெய்ப்பொருள் நாயனாரைப்போல சோழர் காலத்திருந்த திருக்கோவலூர் மன்னராகக் கருதுதல் தகும். இவர் தில்லையைப்பற்றி ஒரே திருவிசைப்பாப் பாடியுள்ளார். இது முன் சொன்ன சேந்தனாரது திருப்பல்லாண்டு நூலின் இறுதியில் வைக்கப்பட்டுள்ளது.

ஒன்பதாந் திருமுறையில் பல பாக்கள் தில்லையைப் பற்றியே காண்பதற்கு என்ன காரணம்? ஐந்து தொழில் இயற்றுவதற்கு ஏதுவாகிய திருநடனம் செய்யப்படும் ஒளி நிலையமாகத் தில்லை விளங்குவதால், அதனை எல்லாத் தலங்களிலும் உயர்ந்ததாகச் சைவ நூல்கள் கூறும். அத்துடன், முதற் பராந்தகன் காலமுதல் சோழர்கள் தில்லையைப் பல்லாற்றானும் சிறப்பித்து வந்ததும், தில்லைப் பெருமானைத் தம் குலநாயகன் எனக் கூறிவந்ததும் தில்லையைச் சோழர் காலத்தில் உயர்த்திவிட்டன. இத்தகைய காரணங்களாற்றான் தில்லை மேற்சொன்ன ஆசிரியர்களால் பெரிதும் போற்றப்பட்ட தென்னல்ாம். -- ". . . . . . . . . . . - „: . ... ^~ . ... ... s o s *