பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமய வளர்ச்சி ༤དོ་དྷུ་ཧྥ 1.7

வைணவ சமயம்

பல்லவர்க்கு முற்பட்ட தமிழகத்தில் சைவத்துடன் வைணவம், பெளத்தம், சமணம் என்ற சமயங்களும் நன்னிலையில் இருந்தன என்பது பண்டைத் தமிழ் நூல்களால் தெரிகிறது. மாயோன், பலராமன் ஆகிய இருவருக்கும் காவிரிப்பூம்பட்டினம் போன்ற பெரிய நகரங்களில் கோயில்கள் இருந்தன என்று சிலப்பதிகாரம் கூறுகிறது." மாயோனையும் பலராமனையும் முறையே வெற்றிக்கும் வலிமைக்கும் நக்கீரர் புறநானூற்றிற் குறித்துள்ளார். அகநானூறு முதலிய தொகை நூல்களிலும் இராமன், கண்ணனைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. அழகர்மலையில் கண்ணன், பலராமன் உருவச் சிலைகள் வழிப்படப்பட்டன. வாசுதேவனான கண்ணனைப் பலராமனுடன் சேர்த்து வழிபடும் வழக்கு, வட இந்தியாவிலும் அப் பண்டைக் காலத்தில் இருந்தது என்பது இலக்கியங்களாலும் கி.மு. முதல் இரண்டு நூற்றாண்டுக் கல்வெட்டுக்களாலும் தெரிகிறது. மாயோனைப் பற்றிய பல விவரங்கள் சிலப்பதிகாரம் ஆய்ச்சியர் குரவையுட் காணலாம். அதன்கண் திருமாலின் இராமாவதாரம், கிருஷ்ணாவதாரம்,திருவிக்கிரம அவதாரம் முதலியன குறிக்கப்பட்டுள்ளன. திருவேங்கடம், திருவரங்கம், அழகர்மலை என்பன சிறந்த வைணவத் தலங்களாகக் குறிக்கப்பட்டுள்ளன." பரிபாடலில் திருமாலைப்பற்றி 6 பாடல்கள் உள்ளன. வஞ்சிமாநகரிற் பல சமயவாதிகள் இருந்தனர். அவருள் வைணவ வாதி ஒருவன்." இவ் விவரங்களை நோக்கப் பண்டைத் தமிழகத்தில் வைணவ சமயமும் ஓரளவு பரவியிருந்தமை நன்கறியலாம்.

சைவமும் வைணவமும்

பாண்டியன் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறனை நக்கீரர் பாடிய ஒரு செய்யுளில், அவனைத்திருமால், பலராமன், சிவன், முருகன் என்னும் நால்வருடனும் ஒப்பிட்டுப்பாடியுள்ளார். நீசினத்தில் சிவனையும், வலிமையில் பலராமனையும், பகைவரைக் கொல்வதில் மாயோனையும், கருதியதை முடிப்பதில் முருகனையும் ஒப்பாவாய்." 'வெள்ளை, 'காரி', 'குரால், சேய்' என்று நிறம்பற்றி எருதுகட்கு இவ்வாறு பெயர் கூறி, அவற்றுக்கு முறையே பலராமன், மாயோன், முக்கண்ணன், முருகன் என்னும் கடவுளையும், அவர்களுடைய நிறம், மாலை, உடை முதலியவற்றையும் பொருந்த வைத்துக் கலித்தொகையில் உவமை கூறப்பட்டுள்ளது. பரிபாடலில் திருமாலைப்பாடிய கடுவன் இள எயினனார் என்ற புலவரே, முருகனையும் வாயார வாழ்த்தியுள்ளார்." கேசவன், அச்சுதன் என்ற இT -