பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழர் காலச் சைவ இலக்கியம் حيتي 188

11-ஆந்திருமுறை

இத்திருமுறையில் குறிப்பிட்டுள்ள இளம்பெருமான் அடிகள், அதிரா அடிகள், பட்டினத்துப் பிள்ளையார், நம்பி ஆண்டார் நம்பி என்னும் நால்வர் பாடிய நூல்களே சோழர் காலத்தவை. ஆதலின் அவற்றுள் ஒவ்வொன்றைப் பற்றிய விவரங்களை இங்கு காண்போம்.

(1) இளம்பெருமான் அடிகள் : 'பெருமான் அடிகள் என்ப்து தேவரத்தில் சிவபிரானைக் குறிக்கிறது; கல்வெட்டுக்களில் பெரும்பாலும் பக்தி மிகுந்த முடியரசனைக் குறிக்கிறது." "இளம்பெருமான்அடிகள் என்பது இளவரசனைக்குறிப்பதாகும்.இங்கு கூறப்பட்ட சைவப்பெரியார் எந்த அரச மரபினர் என்பது தெரிய வழியில்லை. இவர் சிவபெருமான்மீது மும்மணிக்கோவை ஒன்று பாடியுள்ளார். அந்நூலில் உள்ள முப்பது பாக்களும் சுவைபயப்பவை.

(2) அதிரா அடிகள் : இவர் பெயர் அதிரா(ஜேந்திர) - அடிகள் என வழங்கப்பெற்று, அப்பெயர் நாளடைவில் மருவி, 'அதிரா அடிகள் என ஆயிற்றோ, என்று கருத இடமுண்டாகிறது. இவர் விநாயகர்மீது 'மூத்த பிள்ளையார் - திருமும்மணிக் கோவை என்னும் ஒரு நூல் பாடியுள்ளார். முப்பது செய்யுட்களில் 23 தான் அச்சிடப்பட்டுள்ளன; எஞ்சிய பாக்கள் அழிந்துவிட்டன.

(3) பட்டினத்துப் பிள்ளையார் : இவர் காவிரிப்பூம் பட்டினத்தைச் சேர்ந்த திருவெண்காட்டினர். இவர் (1) கோயில் - நான்மணிமாலை, (2) திருக்கழுமல - மும்மணிக்கோவை, (3) திருவிடைமருதூர் - மும்மணிக் கோவை, (4) திரு ஏகம்பமுடையார் - திருஅந்நாதி, (5) திருவொற்றியூர் - ஒருபா-ஒரு பஃது என்னும் ஐந்து நூல்களைப் பாடியுள்ளார். கோயில் நான்மணிமாலையில்.

  • é●彰*喂*“●●●*●●* * * -...........நின்

தமர்பெயர் எழுதிய வரிநெடும் புத்தகத்

தென்னையும் எழுத வேண்டுவன்’ எனவரும் அடிகள் உள்ளத்தை ஈர்க்கத்தக்கவை.

திருக்கழுமல மும்மணிக் கோவையில் சம்பந்தர் ஞானப்பால் உண்ட வரலாறு கூறப்பட்டுள்ளது." திருவிடைமருதூர் மும்மணிக் கோவையில் பிறசமயத்தார் செயல்களும் சைவர் வாழ்க்கையும் அழகுறக் கூறப்பட்டுள. அதே கோவையில் வரகுண பாண்டியனுடைய சிவபக்தி விரிவாகக் கூறிப் பாராட்டப் பட்டுள்ளது.". சண்டீசர், சிறுத்தொண்டர், சாக்கியர், அப்பர்,