பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமய வளர்ச்சி - 189

சம்பந்தர், சுந்தரர் மாணிக்கவாசகரும் பாராட்டப்பட்டுள்ளனர்." திருவேகம்பமுடையார் - திருவந்தாதி ஏறத்தாழ மூவர் பாடிய க்ஷேத்திரக்கோவை போல அமைந்துள்ளது.ஒவ்வொருசமயத்தவரும் வணங்கும் கடவுளாக இருந்து அவ்வவரை ஆட்கொள்வதாகக் கூறும் பகுதி ஒருபா ஒரு பஃதில் சிறந்த பகுதியாகும்.'

(4) நம்பி ஆண்டார் நம்பி : இவர் முதலாம் இராசராசன் வேண்டுகோள்படி திருமுறைகளைத் தொகுத்தவர் என்பது முன்னர்க் கூறப்பட்டது. இவர் பத்துச் சிறுநூல்களைப் பாடியுள்ளார். அவற்றுள் ஆறு சம்பந்தரைப்பற்றியவை.அவை (1) சம்பந்தர்-திருவந்தாதி, (2) சம்பந்தர் - திருச்சண்ட் - விருத்தம், (3) சம்பந்தர் - திருமும்மணிக் கோவை, (4) சம்பந்தர் - திருவுலா மாலை, (5) சம்பந்தர் - திருக்கலம்பகம், (6) சம்பந்தர்-திருத்தொகை என்பன. இந்த ஆறிலும் சம்பந்தர் வரலாற்றுக் குறிப்புக்கள் அனைத்தும் அடங்கிவிட்டன. (7) திருநாவுக்கரசர் - திரு ஏகாதச மாலையில் அப்பரைப் பற்றிய சிறந்த வரலாற்றுக் குறிப்புக்கள் காண்கின்றன. (8) கோவில் - திருப்பண்ணியர் விருத்தத்தில் கண்ணப்பர், சேரமான், சுந்தரர், சாக்கியர், அதிபத்தர், கலிக்காமர், மாணிக்கவாசகர், வரகுண பாண்டியன் ஆகியோர் குறிக்கப்பட்டுளர். (9) விநாயகர் - திரு - இரட்டைமணி, மாலை இருபது செய்யுட்களைக் கொண்டது. (10) திருத்தொண்டர்திரு - அந்தாதி என்பது சுந்தரர் பாடிய திருத்தொண்டத் தொகையைப் பின்பற்றி விரித்துப் பாடப்பட்ட நூலாகும். அதில் 63 நாயன்மார் வரலாற்றுக் குறிப்புகளும் ஒன்பது தொகை அடியார் பற்றிய குறிப்புக்களும் காண்கின்றன. இந்த அந்தாதி சேக்கிழாரது பெரிய புராணத்திற்குச்சிறந்த அடிப்படை நூலாகும்.

12-ஆந்திருமுறை -

இது சுந்தரர் வரலாற்றையும் அவரால் திருத்தொண்டத் தொகையில் குறிக்கப்பெற்ற அடியார் வரலாறுகளையும் கூறும் பெருங் காவியமாகும்; ஏறத்தாழ 4,250 செய்யுட்களை உடையது. தமிழ் நாட்டில் சைவ சமயம்பற்றிச் செய்யப்பெற்ற முதற்காவியம் இதுவேயாகும். இது 'திருமுறைகளையும், கன்ன பரம்பரைச் செய்திகளையும், நாயன்மார் வரலாறுகளை அங்கங்கே குறிக்கும் தில்லை உலாப்போன்ற பிற நூல்களையும் சமண - பெளத்த சமய நூல்களையும் நாயன்மார் பற்றிய கல்வெட்டு சிற்ப - ஓவியச் சான்றுகளையும் உறு கருவிகளாக்க்கொண்டு செய்யப்பெற்றது. இது மொழி பெயர்ப்பு நூலன்று. நூலாசிரியர் காலத்தில் நடந்த வரலாறும்