பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமய வளர்ச்சி འམགངྷ་༔ 191.

தக்கயாகப் பரணி

இது மூவருலாப் பாடிய ஒட்டக்கூத்தர் பாடியது. மூவருலாக் கொண்டு விக்கிரமசோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராசராசன் திருப்பணிகளையும் சைவப்பற்றையும் உணர்தல்போல, இத்தக்கயாகப் பரணிகொண்டு, சோழர்காலச் சைவத்தைப் பற்றிய சில விவரங்களை அறியலாம். சைவத்தின் உட்பிரிவுகளுள் ஒன்றான பைரவ மதத்தின் செயல்கள் இதில் கூறப்பட்டுள்ளன. பைரவர் தங்கள் தலைகளை அரிந்துதுர்க்கையை வழிப்பட்டனர். பைரவிமந்திரத்தைச் செபித்தனர்." சம்பந்தர் முருகனது அவதாரம் என்ற கருத்துத் தக்கயாகப்பரணி செய்த காலத்தில் இருந்ததுபோலும் அவர் சமணரை வென்றமை, சமணர்தாமேகழுவேறினமை என்பனபற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன." சிவாகமம், சைவம் ஆறு பிரிவுகளை உடையது, சைவ யோகிகள் இலக்கணம் என்பன பற்றிய குறிப்புக்களும் தரப்பட்டுள்ளன." சுத்த சைவரே மாகேசுவரர் என்பவர் என்பதும், சூல முத்திரையிட்டுச் சைவராக்குதல், மழுவைப் பொறித்து மாகேசுவரர் ஆக்குதல் என்பனவும் குறிக்கப்பட்டுள்ளன." இந்த நூலின் மூலமும் உரையும் மிகச்சிறந்தவையாகும்.

கல்லாடம் ,

இதன்ஆசிரியர்கல்லாடர் என்பவர்.இவர் காலம் ஏறத்தாழக்கி.பி. 13-ஆம் நூற்றாண்டு என்னலாம்." இவர், மாணிக்க வாசகர் பாடிய திருக்கோவையாரின் சிறப்பை உலகிற்கு அறிவிக்க, அதிலிருந்து 100 செய்யுட்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றின் பொருள் இக்கல்லாடத்தில் காணும்படிஅமைத்து நூறு அகவற்பாக்களைப்பாடியுள்ளார்.ஆதலின், இது கோவை நூல் என்று கூறத்தகும். இவர் தம் பாக்களில் சிவபிரானுடைய திருவிளையாடல்கள் பலவற்றைக் குறித்துள்ளார். நம்பி திரு விளையாடல் சோழர் காலத்து நூல் என்று கூறத்தக்க சான்று இன்மையின், திருவிளையாடல்களைக் கூறும் உத்தர புராணம் என்னும் வடமொழி நூலே இவர்க்கு முற்பட்டதாகும். அதனைக் கொண்டே இவர் திருவிளையாடல்களைக் குறித்தனர் என்று கொள்ளலாம்." இந்நூலின் செய்யுள் நடை கடினமாதலால் இதனைப் படிப்பவர் தொகைமிகக்குறைவு. ஒவ்வொரு செய்யுளிலும் சிவபிரான் திருவிளையாடல் அல்லது வேறு வகைச் சிறப்புக் கூறப்பட்டுள்ளது. கடவுளைப் புகழாதாருடைய உள்ளம் தீவினையாகிய இருள் நிறைந்தது; திருநீறு நல்வினையை உண்டாக்கும்; சிவபெருமான் திருவடிகளை உள்ளத்திற்கொள்ளாதவர்கூடாவொழுக்கத்தினர்:சிவன்