பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமய வளர்ச்சி . 195

எல்லாம் நாற்றம் உடையனவாயினும், தூய்மை பொருந்திய பசுவின் சாணம் பிறமலங்களை எல்லாம் நீக்குதல் போல - ஆசிரியர் மக்களுள் ஒருவனே எனினும், சிவன் அவனை நிலைக்களமாகக் கோடலால், அவன் பிறவியை ஒழிக்க வல்லவனாவன்.'கடலகத்தே அலைகளால்

அலைபுறாது ஆடும்படி நின்றவர்க்கும் கடலின் ஆழத்தையும் அகலத்தையும் அளத்தல் அரிது. அதுபோலக் கடவுள் அருளைப் பெற்றவராயினும், அவர்கள் அவனது முழுப் பெருமையை அறிந்தவராகார்." y

உயிர்

  • .x உயிர்கள் தம் அறிவில் சிவம் விளங்க, தலைவனையும் (கடவுளையும்) தம்மையும் உணரும்; உணர்ந்த பிறகு உடலுடன் இருப்பினும் பற்று நீங்கப்பெற்றுச்செத்தாரைப்போலத்திரியும்;அவை சிவன்வயப்பட்டுநிற்குமாதலால் மீண்டும்.உலகநிகழ்ச்சிகளிற் புகா." ஆற்று நீர் கடலிற்கலந்து கடல் நீராகி மீண்டும் ஆற்றின் படுகையில் மேலேறினும் உப்புத்தன்மை மாறுவதில்லை. அதுபோல, சிவத்தோடு ஒன்றி நிற்கும் மெஞ்ஞானிகளுடைய அறி-செய்ற் கருவிகள் மாயை நிலையில் நில்லாமல் சிவகரணமாக விளங்கும்." அவர்களது பற்றற்ற நிலை, மணியின்கண்துங்கும்.நாக்கிற்கு ஒப்பாகும்."படிகம்தன்னைச் சார்ந்துள்ள பொருளினது நிறத்தைக் காட்டும்; தனது நிறத்தைக் காட்டாது. அதுபோல,உலகத்தைச்சார்ந்து அவ்வண்ணமாயிருத்தலும், முத்தி நிலையில் இறைவனைத் தழுவி நின்று அவன் வண்ணம்ாக இருத்தலும் உயிர்கள் நிலையாகும்."

சாதனம்

சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பன உயிர்கட்குச் சாதன நெறிகளாகும். சிவனறம் வல்வினை, மெல்வினை என இருவகைப்படும். இறைவனைத் துணை என்று கருதி ஒழுகுவதும், பூசைதியானம்,ப்ாடல், ஆடல்முதலியனநிகழ்த்துவதும்மெல்வினை எனப்படும்." சிறுத்தொண்டர் பிள்ளையை அரிந்ததும், சண்டீசர் தந்தையைக் கொன்றதும், அரிவாள் தாயர் தம் கழுத்தையே அரிய முயன்ற்தும் வல்வினைச் சிவனறம் ஆகும்." திருவுருவ வழிபாடும் ஆறு ஆதாரங்களில் இறைவனை நினைத்துத் தியானித்தலும் ஆதாரயோகம் எனப்படும். இறைவனை அகண்டமாய் அருள்வெளியில் மெளனமாக இருந்து வழிபட்டு அவனோடு' ஒற்றுமையுற்று நிற்றல் நிராதாரயோகம் எனப்படும். ஐந்தெழுத்து (பஞ்சாக்ஷரம்) இறைவனைக் காட்டும் இயல்புடையது. நாத