பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 ச. சோழர் காலச் சைவ இலக்கியம்

5.இருபா-இருபஃது - . - இது, தம் ஞான-குருவாகிய மெய்கண்டாரை முன்னிலையாக்கி, வினாவுதல் போலவும், அவர் விடைகூறுதல் போலவும் சித்தாந்தக் கருத்துக்களை 20 செய்யுட்களில் கூறும் நூல். ஆணவத்தின் எட்டு இயல்பும், மாயையின் ஏழு இயல்பும், கர்மத்தின் ஆறு இயல்பும் இதன்கண் கூறப்பட்டுள. சைவத் திருமுறைகளுள் விளங்கும் அருள். தொடர்களாகிய, 'காண்பாரார் கண்ணுதலாய் - காட்டாக்காலே', "உன்னிலுன்னும் உன்னாவிடில் விட்டிடும்." என்பவற்றுக்கு விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. இருநிலனாய்த் தீயாகி என்று தொடங்கும்.அப்பர்திருத்தாண்டகத்திற்கும்."ஆட்பாலவர்க்கருளும் ஆதிமாண்பும்," என்னும் திருஞானசம்பந்தர் திருப்பாசுரத்திற்கும் பொருள் விளக்கம் பாராட்டத்தகும்முறையிற் செய்யப்பட்டுள்ளது.இச் சிறு நூல் மெய்கண்டரரது பெருஞ் சிறப்பினை அறிவிக்கும் பெருமையுடையது. . -

6. உண்மை விளக்கம்

இது, மெய்கண்ட தேவரது மற்றொரு மாணவரான திரு வதிகை-மனவாசகம் கடந்தார் என்பவர்செய்தது;53 வெண்பாக்களை யுடையது. இது முப்பத்தாறு தத்துவங்களையும்." ஆணவம் இருவினை என்பவற்றின் இயல்பையும்,' ஆன்மாவின் இயல்பையும், கடவுளின் இயல்பையும், ஐந்தெழுத்தின் உண்மையையும்,'தம் ஆசிரியரிடத்துத் தமக்கு விளக்கும்படி வினவ, ஆசிரியர் விடையளித்தது போலச் செய்யப்பட்ட நூலாகும். முத்தியிலும்மூன்றுபொருளாகும் இறை,உயிர், உலகம் உண்டு என்று விளக்கும் பெருமையுடையது இந் நூல்.

உமாபதி சிவாசாரியர் இயற்றிய 8 நூல்கள்

1.சிவப்பிரகாசம்:இது சிவஞானபோதத்திற்குச்சார்புநூலாகும். இதன் பாயிரத்துள் திருக்கயிலாய பரம்பரை ஆசிரியர்கள் இன்னார் என்பதும், சைவ நூல்களின் இயல்பும், தீட்சை வகைகளும் சுருக்கமாகவும் விளக்கமாகவும் ஒதப்பட்டுள்ளன. நூலின் அவையடக்கத்தில் நூல்களை ஆராய்ந்து உண்மை தெரியும் முறை நன்கு விளக்கப்பட்டுள்ளது. பழமைபற்றி ஒன்றை நன்றென்றும் புதுமை பற்றி ஒன்றைத் தீதென்றும் கொள்ளுதல் தவறு என்பது ஆசிரியர் கருத்து. .