பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. சைவ சித்தாந்த வளர்ச்சி (திருமூலர் காலமுதல் உமாபதிசிவம் வரை)

முன்னுரை

சைவத் தமிழ் நூல்களுட் சிறந்தன பன்னிரண்டு திருமுறைகளும் பதினான்கு சாத்திரங்களுமேயாகும். முன்னவற்றில் சித்தாந்த கருத்துக்கள் ஆங்காங்கு விரவியுள்ளன; பின்னவற்றில் அவை நிரல்படக் கூறப்பட்டுள்ளன. இந் நூற்களிற் காலத்தால் முற்பட்டது திருமூலர் செய்த திருமந்திரம் என்பது முன்னரே கூறப்பட்டது.'சைவசித்தாந்தம் என்னும்பெயரைக்கூறும் முதல்தமிழ் நூல் திருமந்திரமே யாகும். ; : , , - -

. கற்பன கற்றுக் கலைமண்ணு மெய்யோக முற்பத ஞான முறைமுறை நண்ணியே தொற்பத மேவித் துரிசற்று மேலான தற்பரங் கண்டுளோர் சைவசித் தாந்தரே. இதற்குப் பின் இராஜசிம்ம பல்லவனது கயிலாசநாதர் கோயிற் கல்வெட்டில் 'சைவசித்தாந்தம் என்பது கேட்கப்படுகிறது." சைவசித்தாந்தம், சிவாகமங்களின் பொருளாகக் கருதப்படுகிறது. சிவநெறிச்சார்பான நுட்பமான முடிபுகளையுடையது சைவசித்தாந்தம் எனப்படும். . . .

முப்பொருள்கள் : சைவசித்தாந்த சாத்திரங்கள் இறை, உயிர், உலகம் என்னும் மூன்றையும்பற்றி மிகுதியாகப் பேசும். இவற்றுள் உலகம் ஒன்றே காணப்படும் பொருள். அதனைக் கொண்டு மற்ற இரண்டையும் அறிய வேண்டும். உலகம் ്L് - ഥങ്ങയെ - சூரியன் - சந்திரன் முதலிய பல பொருள்களாக இருக்கிறது. இங்ங்னம் பிரிவுகளையுடையது காரியப் பொருளாகும்.இக் காரியப்பொருள் ஒரு கருத்தா இன்றித் தோன்றமுடியாதாதலின், கருத்தாவாகிய இறை உண்டு என்பது உணரப்படும். இக் கருத்து, $'. . . . "

குசவனைப் போலெங்கள் கோனந்தி வேண்டில்

அசையில் உலகம் அது.இது வாமே."