பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமய வளர்ச்சி བཏྲ་9 2C)7་

என்னும் திருமந்திரத்திலும், சிவஞானபோதம் முதற் சூத்திரத்தும், சிவஞான சித்தியார் முதல் விருத்தத்தும் விளங்குதல் காணலாம். இதனால் உலகம் காரியப்படுத்தப்படுவது என்பதும், காரியப்படுத்துபவர்கடவுள் என்பதும்பெறப்பட்டன. கடவுள் உயிர்கள் பொருட்டே இவ்வாறு காரியப்படுத்துகிறார். எனவே, இறை, உயிர், உயிர்கள் பொருட்டு இறையால் படைக்கப்படும் உலகம் என்னும் மூன்றும் ஒரு காலத்தனவாய் எக்காலத்தும் இருப்பவையாகும். இதனை, . . . .

பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில்

பதியினைப் போற்பசு பாசம் அநாதி:

எனத் திருமூலர் குறித்தல் காணலாம். இக் கருத்து சிவஞானபோதம் நான்காம் சூத்திரத்தும் காணப்படுகிறது.

உலகம் உயிர்களின் பொருட்டுத் தோற்றப்படுவானேன்? உயிர்களின் வினையாகிய கன்மமலத்தைப் பக்குவப்படுத்தவும் அறியாமையாகிய ஆணவ மலத்தைப் போக்கவும் இறைவன் உயிர்கள் பொருட்டு உலகத்தை அழிக்கின்றான்; மீளவும் படைக்கின்றான். ஆக்கல், அளித்தல், அழித்தல் என்னும் முத்தொழிலும் உயிர்கள் பொருட்டே இறைவனால் நிகழ்த்தப்படுகின்றன. இதனை,

- "தோற்ற நிலையிறுதிப் பொருளாய்வந்த மருந்தவன்காண்” என்னும் அப்பர் வாக்கும் உறுதிப்படுத்தல் காணலாம். .

அத்துவிதம் அல்லது சுத்தாத்துவிதம் : இவ்வாறு முத்தொழிலைப்புரியும் இறைவன் எங்கும் நிறைந்துள்ளதன்மையால் உருவமின்றி அருவமாய் இருப்பான். உருவற்ற உயிர் உருவமுள்ள உடலை இயக்குதல் போல - உருவமற்ற கடவுள் உருவமுள்ள பொருள்களை இயக்குகின்றான். அவன் எல்லாப் பொருள்களிலும் ஊடுருவி நிற்பவன்; ஒன்றாய் - பலவாய்த் திகழும் இயல்பினன். இவ்வியல்பினைத்திருமூலர், - - . . . . . -

பரத்திலே ஒன்றாய் உள்ள்ாய்ப் புறமாகி வரத்தினுள் மாயவனாய்அயனாகித் தரத்தினுள் தான்பல தன்மைய னாகி" . - எனக் குறித்தார். நச்சினார்க்கினியர் அகரத்தின் சிறப்பியல்பை உவமையில் வைத்துவிளக்குகையில்,"இறைவன்ஒன்றேயாய்நிற்குந் தன்மையும் பலவுயிர்க்கும் தானேயாய் அவற்றின் அளவாய் நிற்குந் தன்மையும் போல' என்றார். இவ்விளக்கம், . .