பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமய வளர்ச்சி , 211

சிரக்கண் வாய்செவி மூக்குயர் காயமாகித் தீவினை தீர்த்த எம்மான்’

என்று சுந்தரர் குறித்தனர். - உயிரின் மூன்று நிலைகள்:உடலைப் பெறுகின்றஉயிர் மூன்று நிலைகளை உடையது. உடலைப் பெறுவதற்கு முற்பட்டநிலை கேவலநிலை; உடல் பெற்று வாழ்கின்ற நிலை சகலநிலை; உடல்பெற்றிருந்தும் பற்றற்ற நிலை சுத்தநிலை எனப்படும். கேவலநிலை என்பது ஆணவத்துடன் கட்டுப்பட்டு, அறியாமை மூடி, உணர்வும் செயலும் அற்றநிலை. சிவன் தன் சக்திமூலமாகக் கலை என்னும் தத்துவம் கொண்டு ஆணவத்தைச் சிறிது நீக்கி, உயிரின் செயலாற்றலை எழுப்பி அறிவுபெறச் செய்து, பற்றினையும் கூர்ந்து வளரச் செய்து, உடம்போடு புணத்திய பிறகு தோன்றும் நிலையே சகலநிலை. உயிர் உடலில் வாழும் போது, பிறவித் துன்பத்துக்கு ஏது உலகப்பற்றே என்பதைத் தெளிந்து, பற்றற்ற உணர்வும் செயலும் இறையருளால் ஆக்கிக்கொள்ளும் நிலையே சுத்தநிலை என்பது. இவற்றை, *

அறிவி லாதவெனைப்புகுந் தாண்டுகொண்

- டறிவதை யருளிமேல் நெறியெ லாம்புல மாக்கிய எந்தையைப் -

பந்தனை அறுப்பானை'

என்று மாணிக்கவாசகர் தெளிவுறக் குறித்தல் காணலாம். சுத்தநிலையை, - -

உடம்போடு

ப செத்திட்டிருப்பர் சிவயோகியர்களே

என்று திருமூலர்' குறித்தனர். உயிரின் இம்மூன்று நிலைகளும் சிவஞானபோதத்து 4,5,6ஆம் சூத்திரங்களில் முறையே விளக்கப்பட்டுள்ளன. சகல நிலையில் நனவு, கனவு, உறக்கம், பேருறக்கம், உயிர்ப்படக்கம் என்னும் ஐந்து அவத்தைகள் உண்டு. இவற்றைத் திருமூலர் முதல் உமாபதிசிவம் வரை அனைவரும் விளக்கிச் செல்கின்றனர். - - -

இறை 'சிவசத் என்றும், உயிர் சதசத் என்றும், உலகம் 'சடசத் என்றும் சொல்லப்படும். இம்மூன்றையும் சிவஞான போதத்து 6.7ஆம் சூத்திரங்கள் விளக்குகின்றன. சத்' என்பது இறையைக்