பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 ச 6ᏈaᏜFᏮaᏗ சித்தாந்த வளர்ச்சி

குறிப்பது, அசத்' என்பது அறிவற்ற உலகைக் குறிப்பது; சத்-அசத்' என்பது உயிரைக் குறிப்பது. உயிர் இறைவனையும் உலகத்தையும் சேர்ந்திருப்பது. உயிர் இறையைச் சார்ந்துள்ளபோது உலகம் நீங்கியிருக்கும்; உலகத்தைச் சார்ந்துள்ளபோது இறையை மறந்து ஆணவத்துடன் கலந்திருக்கும். உலகம் அறிவற்றதாதலின் இறையை அறியாது; உயிர் சிற்றறிவுடைமையின் முற்றறிவுடைய இறையை யறியாது; இறைவன் திருவருள் வசமாக உயிர்நிற்கும் போதுதான் இறைவனை அறிதல் கூடும். இதனை,

விண்ணினைச் சென்றனு காவியன் மேகங்கள் . கண்ணினைச் சென்றணு காப்பல காட்சிகள் எண்ணினைச் சென்றணு காம லெனப்படும் அண்ணலைச்சென்றணு காப்பசு பாசமே." என்று திருமூலர் விளங்கவுரைத்தார்.

உயிர்களை இறைவன் ஆட்கொள்ளும் வகை : உயிர்கள் தம் பக்குவநிலை ஒட்டியே இறைவன் திருவருள்ைப் பெறமுடியும். உயிர்கள் இருவினையொப்பு, மலபரிபாகம், சத்திநிபாதம் என்பவற்றை அடைதலால் பக்குவநிலை ஏற்படும். - -

இருவினை நேரொப்பில் இன்னருட் சத்தி

குருவென வந்து குணம்பல நீக்கித் தருமெனும் ஞானத்த்ால் தன்செயல் அற்றால்

திரிமலம் தீர்ந்து சிவனவன் ஆமே."

.. இருட்டறை மூலை இருந்த குமரி

குருட்டுக் கிழவனைக் கூடல் குறித்துக் குருட்டினை நீக்கிக் குணம்பல காட்டி மருட்டியவனை மணம்புரிந்தாளே." என்னும் திருமந்திரப் பாடல்கள் இருவினை ஒப்பு, சத்திநிபாதம் என்பவற்றை விளக்குகின்றன. இவற்றின் விரிவெல்லாம் சிவஞான போதம் 8-ஆம் சூத்திரத்திற்குச்சிவஞானமுனிவர் செய்த பேருரையிற் காணலாம். . . . . .

பக்குவநிலைபெற்ற உயிர்கட்கு இறைவன்குருவடிவாக வந்து. உண்மை உணர்த்தி உயிர்களைத் தன்வசமாக்குகிறான் என்பது மேற்சொன்ன முதல் செய்யுளால் தெரிகிறது.இதனைத்திருமூலர், பத்திப்பணித்துப் பரவும் அடிநல்கி । சுத்தவுரையால் துரிசறச் சோதித்துச்