பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவசமய வளர்ச்சி ఇష్ట్రా 213

சத்தும் அசத்தும் சதசத்தும் காட்டலால் சித்தம் இறையே சிவகுருவாமே." என்னும் செய்யுளில் நன்கு விளக்குகிறார். - மானிக்கவாசகர்,

அருபரத் தொருவன் அவனியில் வந்து குருபரன் ஆகி அருளிய பெருமையும்"

என்றும், - -

"என்னுடைய குருவே" என்று சுந்தரரும் குறித்தமைகாண்க. இறைவன் இங்ங்ணம் குருவாக வந்து, தான் ാഖങ്ങൾ தன்மையை உணர்த்தி, உயிர்களை அடிமை கொள்ளுவன். இதனை அப்பர் நன்கு தெரிவிக்கிறார்:

என்னை யேதும் அறிந்திலன் எம்பிரான் தன்னை நானுமுன்னேதும் அறிந்திலேன் என்னைத் தன்னடி யானென் றறிதலும் தன்னை நானும் பிரானென் றறிந்தெனே.

மாணிக்கவாசகரும் தம்மை இறைவன் ஆண்டுகொண்ட முறைமையால் உணரும் நிலையை நன்கு விளக்குகிறார்:

பவனெம்.பிரான்பனி மாமதிக் கண்ணிவிண்ணோர்பெருமான் சிவனெம் பிரானென்னை யாண்டுகொண் டானென்

. . . . . . . . . . சிறுமைகண்டும் அவனெம் பிரானென்ன நானடி யேனென்ன இப்பரிசே

புவனெம் பிரான்தெரியும்பரி சாவதியம்புகவே." . சிவஞானபோதம் 8-ஆம் சூத்திரத்தில், "குருபரன் தோன்றி உயிரை நோக்கி, நீ நின் பெருந்தகைமை அறியாது மயங்கி இடர்ப்பட்டனை.நின்பெருந்தகைமை இத்தகையது என்று உணர்த்தி அறிவுறுத்துவன் என்பது குறிக்கப்பட்டுள்ளது.

இதுகாறும் கூறியவற்றால், இறைவன் உயிர்கட்கு உடல்ைக்கூட்டி, வினைப்போகம் துய்க்கச்செய்து, மலத்தைக்கழிக்கச் செய்தலும், பக்குவம் வந்தபோது வெளிப்பட்டுக் குருபரனாகி உண்மை ஞானத்தை உணர்த்தலும் அவனது அருள் தன்மையால் நிகழ்வன என்பது பெறப்பட்டது. இவ்வருள் தன்மையாலேதான் சாக்கியர் சைவசமயமே.பெரிதென்பதும் இறைவனேதுணை என்பதும்

நன்குணர்ந்தார். .