பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 ச. சைவ சித்தாந்தவளர்ச்சி

செய்வினையும் செய்வானும் அதன்பயனும் கொடுப்பானும் மெய்வகையால் நான்காகும் விதித்தபொருள் எனக்கொண்டே இவ்வியல்பு சைவநெறி அல்லவற்றுக் கில்லையென உய்வகையால் பொருள் சிவன்என் றருளாலே

- உணர்ந்தறிந்தார்.” இறைவனது துணைச்சிறப்பினை,

துணையென்று நான்தொழப் பட்டவொண் சுடரை முத்தியும் ஞானமும் வானவர் அறியா முறைமுறை பலபல நெறிகளும் காட்டிக் கற்பனை கற்பித்த கடவுளை . என்று சுந்தரர்" அனுபவித்துக் கூறியிருந்தலைக் கொண்டும் அறியலாம். -

உண்மை ஞானம் பெற்ற உயிர்களின் ஒழுகலாறு : இறைவன் அருளால் உண்மைஞானம் பெற்ற உயிர்கள் அவனடியைச் சாரும் நெறிகளில் ஒழுகவேண்டும். அதுவே தவநெறி' எனப்படும். இறைவனருளால் ஆட்கொள்ளப்பட்ட் சுந்தரரும் திருத்துறையூர்ப் பதிகத்தில் 'தலைவா, உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே' என்று கூறியது காண்க. சைவ சமயக் குரவர்கள் சென்று காட்டிய நெறி தவநெறியாகும். அவர்கள் நாளும் திருக்கோயில் சென்று இறைவனை வழிபடும் நியமம் உடையவர்கள். .

நாடு நகரமும் நற்றிருக் கோயிலும் தேடித் திரிந்து சிவபெரு மானென்று பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின் கூடிய நெஞ்சத்துக் கோவிலாக் கொள்வனே."

என்று திருமூலர் உயிர்கட்கு அறிவுறுத்தல் காண்க. உயிர்கள் சைவாகமங்களிற் குறித்த சரியை, கிரியை, யோகம், ஞான்ப்படிகளைப் பின்பற்றி, அவற்றின் பயனைப் பெற வேண்டும்.

பத்தன் கிரியை சரியை பயில்வுற்றுச் சுத்த அருளால் துரிசற்ற யோகத்தில் உய்த்த நெறியுற் றுணர்கின்ற ஞானத்தால் சித்தங் குருவருளாற்சிவ மாகுமே." என்றார் திருமூலர். வெறும் ஞானம் பெறுதல் பயனில்லை. அதனால் விளைந்த அன்புநெறி, இறைவனோடு பொருந்துவதற்குச் சிறந்த சாதனமாயிற்று. அன்புநெறிக்கு அறிவு நெறி துணையாகும். இவ்விருவகை நெறியிற் பெறுவது முத்திநிலை. • r