பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமய வளர்ச்சி ཐ་ར་ཝུརྱ་215

- முத்திநிலை : "யான்- எனது என்னும் செருக்கற்று இறைவனது பேரின்ப நிலையில் ஒடுங்கி நிற்றலே முத்தி நிலை என்பது.

  • * * * * * * 3 * 8 а а в 8 3 பிணி மேய்ந்திருந்த

இருகாற் குரம்பை யிதுநானுடைய திதுபிரிந்தால் தருவாய் எனக்குன் திருவடிக் கீழோர் தலைமறைவே."

என்று அப்பர் வேண்டிய முத்திநிலை இதுதான். இந் நிலை அடைந்தோர் இறைவனை விட்டு நீங்காத்திறத்தினர். அவர் செய்யும் செயல்கள் யாவும் இறைவன்செயல்களே ஆகும்.அவர்கட்குவிளங்கும் கரணங்கள் யாவும் சிவ கரணங்களாக மாறி நிற்பன.

கூறும் நாவே முதலாகக் கூறும் கரணம் எல்லாம் நீ"

என்று மணிவாசகர் கூறுதல் காண்க. இத்தகைய அன்பர்க்கு நேரும் ஊறுகளை இறைவனே ஏற்பன். இதனை, . -

தமக்கன்பு பட்டவர் பாரமும் பூண்பர்" என்னும் அப்பர் திருவாக்கால் அறியலாம்.

இம் முத்தர் நாளும் ஐந்தெழுத்தினை மறவாதவர்கள், அதனைப் பிறவிக் கடலைக் கடக்கும் தெப்பமாகக் கருதுபவர்கள். சுந்தரர் வெயிலில் வந்த தளர்வுநீங்க ஐந்தெழுத்தோதினார்" என்றும், தண்டியடிகள் நாடோறும் ஐந்தெழுத்து ஒதினார்" என்றும் சேக்கிழார் கூறுவர். இவ்வைந்தெழுத்தின் சிறப்புக்கள் சிவஞானபோதம் 9-ஆம் சூத்திரத்திலும், திருவருட்பயன் அஞ்செழுத்தருள் நிலை யிலும் விரித்துரைக்கப்பட்டுள்ளன. х

இம் முத்தர்கள், அணைந்தோர் என்றும், அடியார் என்றும், 'சீவன் முக்தர்கள் என்றும் பெயர் பெறுவர். இவர்கள் கூட்டமே, 'அடியார் கூட்டம் அல்லது 'திருக்கூட்டம் என்பது. முத்தர்கட்கு இக் கூட்டம் தேவையானது என்பதை .”

இணங்கத்தன் சீரடியார் கூட்டமும் തു് என்ற மணிவாசகர் உரையால் அறிக. இவர்கள் இறைவனது திருவேடத்தையும் திருக்கோயிலையும் சிவனெனக் கருதும் இயல்பினர். இவ் விவரங்கள் சிவஞானபோதம் 12-ஆம் சூத்திரத்தும் குறிக்கப்பட்டன. இவ்வடியாரது பெருமையைச் சுந்தரர் திருத்தொண்டத் தொகையும் அது பாடநேர்ந்த சந்தர்ப்பமுமே நன்கு விளக்கவல்லவை." சேக்கிழாரும் இவ்வடியார் பெருமையைப் பல பாக்களில் விளக்கினார்." -