பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமய வளர்ச்சி ༤༥བླླ་ ༦ 2 4 ?.

12. சைவரது சமுதாய வாழ்க்கை

கல்வி: 1. பல்லவர் காலத்திலும் சோழர் காலத்திலும் பல வடமொழிக் கல்லூரிகள் இருந்தன என்பது முன்னரே கூறப்பட்டது. பல்லவ அரசர்கள் பலர் வடமொழியிற்சிறந்த புலமைபெற்றிருந்தனர்; பாரவி, தண்டிபோன்ற வடமொழிப் புலவர்களை ஆதரித்தனர் என்பன முன்னர்க் கூறப்பட்டன. மூன்றாம் நந்திவர்மனும் அபராசிதவர்மனும் சிறந்த தமிழறிஞர்கள் என்பதும், பின்வந்த சோழர்கள் தமிழறிஞர்கள் என்பதும், அவருள் விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராசராசன், ஒட்டக்கூத்தர் மாணவர் என்பதும், மூன்றாம் குலோத்துங்கன் கம்பர் முதலிய புலவர்களுடன் பழகிய தமிழறிஞன் என்பதும் சென்ற பகுதிகளிற் கூறப்பட்ட செய்திகளேயாகும். பல்லவர் காலத்தில் தமிழ்க் கல்வி எங்ங்ணம் இருந்ததென்பதை விளக்க, ஐயடிகள் காடவர்கோன், காரைக்கால் அம்மையார், கபில தேவர் முதலிய அடியார்கள், அப்பர், சம்பந்தர், சுந்தரர், சேரமான் பெருமாள், மணிவாசகர் முதலியோர் அருட்பாடல்களும் நந்திக்கலம்பகம், பாரத வெண்பா முதலிய இலக்கிய நூல்களுமே சிறந்த சான்றாகும். கண்டராதித்தர், இரண்டாம் குலோத்துங்கன் முதலிய சோழர்கள் கவிபாடும் ஆற்றல் பெற்றிருந்தனர் என்பதும், முதலாம் இராசேந்திரன் பண்டித சோழன் எனப்பாராட்டப் பெற்றவன் என்பதும் சைவ அரசர்கள் பெற்றிருந்த புலமையை நன்குணர்த்தும்

2. ஐந்து வயதில் மயிர்நீக்கிக் கல்வி தொடங்குதல் வழக்கம்.' பிராமணராயின் பூணுாற் சடங்கு செய்த பிறகே கல்வி தொடங்கப்பெறும். மயிர் நீக்குதல் சைவ சடங்குகள் பதினாறனுள் ஒன்று. இப் பதினாறும் ஒவ்வொரு ஞானப் பொருளைக் குறிப்பன எனவும், அவற்றுள் மயிர் நீக்குதல் சிவப்பிரசாதத்தின் உயர்வைக் குறிப்பதெனவும் சிவாகமம் கூறும் கல்வி, நற்பொருள்களை வெள்ளம் போலப் பெருக உதவி-அறிவு விளங்கச் செய்தலால் மனம் சுருண்டிருந்த நிலையை நீக்கி மலரச்செய்யும் இயல்புடையது என்று. அக் காலத்தவர் கருதினர். அவர்கள் இலக்கியக் கல்வியும், சிவம் முயன்றடையும் தெய்வக் கலைகள் பலவும் கற்றனர். பின்னவை வேதம், சிவாகமம், வேதாங்கம், புராணம், இதிகாசம், ஆயுர் வேதம் முதலியன - * . -