பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமய வளர்ச்சி དམགངྷ་> 2 19

ஏற்ற சான்றாவர். பெண்கள் அம்ம்ானை, பந்தாட்டம் முதலிய பலவகை விளையாட்டுகளிலும் சிவனைப் பற்றிய பாடல்களைப் பாடினர் என்பதும் சம்பந்தர் தேவாரத்தால் தெரிகின்றது:

“தருந்தடக்கை முத்தழலோர் மனைகள்தொறும்

இறைவனது தன்மையாடிக்

கருந்தடங்கண் ணார்கழல்பந் தம்மானைப்

பாட்டயருங் கழுமலமே' பூக்கொய்தல் முதலிய பலவகை விளையாடல்களிலும் பெண்கள் இங்ங்னமே சிவனது சிறப்பைப் பாடிவிளையாடினர் என்பது திருவாசகத்தால் தெரிகிறது. இவை ஆறாம் அதிகாரத்தும் குறிக்கப்பட்டவையே. காரைக்காலம்மையார் பாடல்களில் சைவ சித்தாந்தக் கருத்துக்கள் இருத்தலும், சோழர் காலத்து மாளிகை மடத்து ஆசாரியரிடம் மாணவி-ஒருத்தி சமயக்கல்வி பயின்றனள் என்பதும், பூெண்களும் சமய சாத்திரப் பயிற்சியுடையராயிருந்தனர் என்பதை உணர்த்துகின்றன. திலகவதியார், மங்கையர்க்கரசியார், செம்பியன் மாதேவியார் போன்ற சைவத் தாய்மார்கள் சைவ சித்தாந்த உண்மைகளை அறியாதவர்கள் என்று கூறமுடியுமா?

திருமணம் : மணமகன் வீட்டார்கள் சில பெரியோரைப் பெண்ணைப்பெற்றோரிடம் அனுப்பி, இன்னமகனுக்கு நும்மகளைத் தருதல் வேண்டும் என்று கேட்பர். இதனைத்திலகவதியார், சம்பந்தர், சுந்தரர், கலிக்காமர் திருமணங்களிற் காணலாம்." இருதிறத்தாரும் மணமக்களின் குலம், கோத்திரம், குணம் இவற்றை ஆராய்ந்த பிறகே மணத்திற்கு ஒருப்படுவர், பின்னர் உற்றார் - உறவினர்க்கு ஒலை போக்கிக் குறித்த நன்னாளில் திருமணத்தை நடத்துவர்." இத்திருமணச் சடங்குகள் பற்றிய விவரங்கள் சம்பந்தர் புராணத்தும், தடுத்தாட்கொண்ட புராணத்தும்," காணலாம். திருமணத்தின் போது சங்கு, தாரை, சின்னம், பெருங்காளம், தாளம், வங்கியம், நாதசுரம் முதலிய கருவிகள் ஒலித்தன. மணமகனும் மணமகளும் பலவகை ஆடையணிகளால் தம்மை அலங்கரித்தல் மரபு. மணமகன் அலங்கரித்துக்கொண்டு மணப்பந்தலுக்குச் செல்லுமுன் சிவாய நம என்று ஐந்தெழுத்தோதித் திருநீறணிதல் மரபு.’ இங்ங்னம் பல சடங்குகளுடன் வீட்டில் திருமணம் நடப்பதே பெருவழக்கு. கோயில்களில் இறைவன் திருமுன் திருமணம் நடத்தலும் உண்டு

என்பது.சுந்தரர் வரலாற்றால் அறிகிறோம்.அவர்திருவாரூர்க்கோயிலில்

பரவையாரையும், சங்கிலியாரைத் திருவொற்றியூர்க் கோயிலிலும்