பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமய் வளர்ச்சி ఇ 225

அவர்கள் அரசர் பள்ளியறையுள்ளும் நுழையும் உரிமை பெற்றிருந்தனர். இந்த உரிமையைப் பகையரசர்கள் தங்கட்குச் சாதகமாகப் பயன்படுத்திச் சைவ அரசர்களை எளிதிற் கொன்றனர் என்பதற்கும் சான்றுண்டு." சிவனடியார் வேடத்திற்காணப்பட்ட பகைவரைச் சைவ வீரர்கள் எதிர்த்திலர்."

அடியார்தாம் கருதியது நிறைவேறஉண்ணாவிரதம் இருத்தலும் மரபு." அடியார்கள் தமக்குள் ஒற்றுமையும் அன்பும் மரியாதையும் உடையவர்கள். ஒருவரை ஒருவர் கண்டவுடன் தலைவணக்கம் செய்வர்" அடியார் குழாத்தில் இருப்பதையே விரும்புவர்; தமக்குக் காலத்தால் முற்பட்ட அடியார்களையும் தம்காலத்து அடியார்களையும் அவர்களுடைய பக்திச்செயல்களைக்குறிப்பிட்டுப்போற்றிப்புகழ்வர். இப் பண்பு மூன்று, ஆறாம் பகுதிகளிற் குறிக்கப்பெற்றது. ஒடும், பொன்னும் ஒக்கநோக்கும் உள்ளம் படைத்த அடியார்கள் சிலர், குற்றம் செய்தார் எவரேயாயினும் அவர்களைத் தண்டிக்கத் தவறியதில்லை. எறிபத்தர் சோழன் பட்டத்து. யானையைக் கொன்றதும், செருத்துணையார் கழற்சிங்கரது பட்டத்தரசியின் மூக்கரிந்ததுமே தக்க சான்றுகள் ஆகும். அடியார்கள் அரசரைப் பொருளாகக் கருதி அஞ்சவில்லை என்பதற்கு அப்பர்வரலாறே ஏற்றசான்றாகும்.மூன்றாம் குலோத்துங்கன் ஆணையைச் சுவாமிதேவர் என்ற இராஜகுரு மாற்றி யமைத்ததையும் அதனை அரசன் ஆமோதித்ததையும் காணச் சைவப் பெரியார்களின் மதிப்பு நன்கு விளங்கும்.

'நாமார்க்கும் குடியல்லோம், நல்னை யஞ்சோம்

என் கடன் பணிசெய்து கிடப்பதே நற்றுணையாவது நமச்சி வாயவே என்ற அப்பர் பாக்களின் அடிகள் அடியார்களது உள்ளத்திறனைநன்கு விளக்கவல்லவை. . . . . . . -

அடியார்களும் ஐந்தெழுத்தும் - அடியார்கள் ஐந்தெழுத்தின் துணையை உறுதியாகப் பற்றியவர்கள். அமர்நீதியார் தராசில் ஏறியபொழுதும்." ஆனாயர் . குழலிசைத்த பொழுதும்," திலகவதியார் அப்பரைச் சைவராக்க விபூதி தந்தபொழுதும்." அப்பர் கல்மேல் மிதந்தபோதும், சம்பந்தர் முத்துச் சிவிகையில் ஏறியபொழுதும்." அவர் பாண்டிநாட்டிற்குப் புறப்பட்ட போதும்," தண்டியடிகள் சமணர்முன் சபதம் கூறிக் குளத்தில் மூழ்கியபோதும்," புகழ்ச் சோழர் தீக்குளித்த போதும்,” சேரமான் சைவ I5 -