பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமய வளர்ச்சி =छु: 21

என்னும் மணிமேகலை அடிகள் உறுதிப் படுத்துகின்றன. கோயில் என்னும் சொல் அக்காலத்தில் கோயிலையும் அரசன் அரண்மனையை யும் குறித்தது. இதனால் அரசன் வாழ்ந்த அரண்மனையும் கோயிலும் பல பகுதிகளில் ஒத்திருந்தன. ஒன்றின் சிறப்புப் பெரும்பாலும் மற்றொன்றைக் குறிக்கும் எனக் கோடல் தவறாகாது. இரண்டும் சுற்று மதில்களை உடையவை; உயர்ந்த வாயில்களை உடையவை; வாயில்களின்மீது உயர்ந்த கோபுரங்கள் (மண்ணிடுகள்) உடையவை."வாயில்கட்குத்துருப்பிடியாதபடிசெந்நிறம் பூசப்பட்ட இரும்புக் கதவுகள் பொருத்தப்பட்டிருந்தன." மாடங்கள் உயர்ந்து சாந்து பூசப் பெற்றவை." கோயில்களின் மேற் கூரை சாந்து வேயப்பட்டிருந்தது. சில, தாமிரம் வெள்ளி முதலிய உலோகங்களாலான கூரைகளைப் பெற்றிருந்திருக்கலாம். மதுரையில் உள்ள சிவன் கோயிலில் வெள்ளியம்பலம் உண்டு. அது புறநானூற்றிற் குறிக்கப்பட்டுள்ளது. அச் சபையில் இறந்த காரணம் பற்றிப் பாண்டியன் ஒருவன், வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி' எனப் பெயர் பெற்றான். வெள்ளியம்பலம் இருந்த தெருவில் வாழ்ந்தவராதல் பற்றி வெள்ளி வீதியார் என்று ஒருபெண்பாற் புலவர் பெயர் பெற்றனராகலாம்,' என்று நற்றிணைப் பதிப்பாசிரியர் ஊகித்தல் கவனிக்கத் தகும். திருப்பரங்குன்றத்துக் கோயிலில் ஒவியங்கள் தீட்டப்பெற்ற மண்டபம் ஒன்று இருந்தது என்பது முன்னர்க் கூறப்பட்டதன்றோ? அத்தகைய மண்டபங்கள் சில கோயில்களிலேனும் இருந்தன எனக் கோடல் தவறாகாது.

லிங்க வழிபாடு x y .

லிங்க வழிபாடு வேத காலத்திற்கு முற்பட்ட சிந்து வெளி மக்களிடம் இருந்தது;" வேதகாலத்திற் பழங்குடிகளிடம் இருந்தது: இதிகாசகாலத்தில் எல்லோரிடமும் பரவியது:"சிவபெருமானான மகா தேவனைக் குறிக்கும் மூர்த்தமாகக் கருதப்பட்டது." தென் இந்தியாவில் வேதகாலத்திற்கு முற்பட்ட கற்காலத்திலேயே லிங்கங்கள் இருந்தன." இதிகாச காலத்தில் இராமனால் இராமேஸ்வரத்தில் லிங்கம் வழிபடப்பட்டது என்று இராமாயணம் கூறுகிறது. குடிமல்லம், களத்தூர், குடுமியான்மலை." என்னும் இடங்களில் உள்ள பழைய கோவில்களில் உள்ள லிங்கங்கள் கி.மு.2-ஆம் நூற்றாண்டின என்று ஆராய்ச்சியாளர் கூறியுள்ளனர்."

லிங்கம்-பீடம் என்பன உலகத் தோற்றத்தைக் குறிக்கும் சிவ-சக்திகளின் குறிகள் என்று வடமொழிப் புராணங்களும், பிற வடமொழி நூல்களும் விளக்கமாகக் கூறுகின்றன." லிங்க வணக்கம்