பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 சைவரது சமுதாய வாழ்க்கை

இராசாதித்யன் என்னும் கங்கர் தலைவன் சோழபுரத்தில் சிவன் கோயிலைக் கட்டினான்;தன் தந்தை புதைக்கப்பட்ட இடத்தில் ஒரு பள்ளிப் படையை (கோயிலை) அமைத்தான்." முதலாம் ஆதித்த சோழன் காளத்தியை அடுத்த தொண்டைமான் ஆற்றுாரில் இறக்க, அங்கு அவன் மகனான பராந்தகன் ஆதித்தேசுவரம் என்ற கோயிலைக் கட்டினான். விழாக்காலங்களில் ஆயிரம் பிராமணர் உண்ண வசதி செய்தான்." அரிஞ்சயன் ஆற்றுாரில் இறக்க, முதலாம் இராசராசன், அவன் இறந்த இடத்தில் ஒரு கோயிலைக் கட்டினான்." இத்தகைய கோயில்களிலும் வழிபாடுகளும் விழாக்களும் குறைவின்றி நடந்தன."

கோயிலில் மக்கள் வழிபாட்டு முறைகள்: கோயிலில் ஆகம முறைப்படி பூசை நடைபெற்றது; காலையில் கோயிலிற் சங்கொலித்தல் மரபு. அப்பொழுது கோயிலிற் குங்குலியப் புகை கூட்டல் மரபு." தேன், இளநீர், ஆனைந்து கொண்டு அபிஷேகம் நடைபெற்றது." காலையில் மக்கள் எழுந்து நீராடித் திருநீறணிந்து கோயிலுக்குச்செல்வர்."பலர் தோத்தி ரப்பாக்களைப் பாடிக்கொண்டே கோயிலிற்புகுவர்." மக்களிடம் உள்மெலிவு, உணர்ச்சி, உருக்கம் காணப்படும்; பாடிக்கொண்டே திருச்சுற்றை வலம் வருவர்." வாழிபோற்றி-சயசய, என்று கூறிக் கடவுளைத் துதிப்பர்" பாடுவர், ! பணிவர், பல்லாண்டிசைப்பர்’ ஐம்புலனும் அகத்தடக்கிநினைப்பர்’ மூன்று சந்தி வணங்குவர்; பிரார்த்தனை செய்துகொள்ளல் மரபு." கனவிற்கண்ட காதலர்மீது காதல்கொண்ட கன்னியர் மணம் இசைக்குமாறு இறைவனைவேண்டலும் உண்டு."பக்தர்கள் கையால் தொழுது தலைசாய்த்து (வணங்கி) உள்ளம் கசிவார்கள்:” கோயில்களிலும் வீடுகளிலும் இருந்து அக்குமாலை வைத்து செபிப்பவரும் உண்டு.” பக்தர்கள் அழுது குறையிரந்து உள்ளத் தூய்மை பெற்றனர்.” அப்பர் பாடிய திருக்கன்றாப்பூர்த் திருத்தாண்டகமும், சம்பந்தரது திருமுதுகுன்றப் பதிகமும், பிற சில பாடல்களும் வழிபாட்டு முறைகளை நன்கு விளக்குவனவாகும்." கோயிலில் கடவுளை முதலில் ஆடவர் அஷ்டாங்கவணக்கம் செய்வர்; அஃதாவது, இரண்டு கால், இரண்டு கை, தலை, இரண்டு காதுகள், நெற்றி என்பன தரையிற் பொருந்துமாறு வணங்குவர்; பின்னர் இரண்டு கைகளும் இரண்டு கால்களும் தலையும் தரையில் படும்படி பஞ்சாங்க வணக்கம் செய்வர். பெண்கள் அஷ்டாங்க வணக்கம் செய்யலாகாது; பஞ்சாங்க வணக்கம் செய்வர். கோயிலில் х வேறெவரையும் வணங்கலாகாது; ஸ்தூபி முதலியவற்றின் நிழலை மிதித்தல் ஆகாது என்பது விதி." -